Pages

Aug 1, 2012

கணக்கில் புலி.....


ஒரு காலத்தில் மிக நுணுக்கமான அளவுகளைக் கூட பேர் சொல்லி உபயோகப்படுத்தி இருக்காங்க... பாருங்க கீழே...

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.


எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து
100 நூறு
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)




இப்ப எனக்கு மாசப்பேரே தெரியல... பல குழந்தைகளுக்கு அம்மா அப்பா என்ற வார்த்தையே தெரியல....

மின்னஞ்சலை தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் அனுப்பியவர்களுக்கு நன்றி. எனக்கு Perampalam Kanapathippillai kana47@gmail.com வந்தது. அவருக்கும் நன்றி.