Pages

Nov 30, 2007

வாழ்க்கைப் பயணம்

நேற்றைப் போலவே
இன்றும் மற்றோரு தினம் ..

ஞாயிரு, திங்கள் என
இனம் பிரித்தரிய முடியாமல்
ஒவ்வொரு நாளும்
மரணம் மட்டுமே இலக்காய்
எதர்க்கென்று தெரியாமலே
வாழ்க்கை பயணம்

என்னுளிருந்து
என்விடுதலைக்காய்
ஆரம்பமே எச்சமாய் .. ..

வளரும் பருவத்தில்
வறுமையில் இருந்தபோதும்
வாழ்ந்ததில் இருந்த சுவை
இன்று இல்லை
ஆண்டவன் அளவுக்குவதிகமாகவே
வாழ்வும், நேரமும் கொடுத்து
சலிக்க வைத்துவிட்டன்
வாழ்வை...

Oct 1, 2007

காந்தி பிறந்த நாள்

நான் சமீபதில் பெர்லினில் உள்ள சார்லி செக்-பாயிண்ட் போயிருந்தேன். பார்வைக்காக வைத்து இருந்த பெர்லின் சுவர் அருகே பெரிய அருங்க்காட்சி சாலை இருந்தது. அதில் அனைத்து நாட்டு பெரிய தலைகளின் புகைப்படம் இருக்கும்போது காந்திக்கு சிலையே வைத்து இருக்கிறார்கள் - பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவில் மட்டுமே காந்தியை கொண்டடுவார்கள் என நினைத்து இருந்தது எவ்வளவு தவறு... உலகம் முழுக்க அவரை கொண்டாடுகிறார்கள்.

உண்மைக்காக தன்னையே புடம் போட்டுக்கொண்டவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியா போனேன். அதில் கீழே கண்ட வெளி இனைப்புகள் உள்ளது.
http://www.gandhiserve.org/
http://www.mahatma.org.in/
- இதில் நமது இந்திய இனைப்பில் Error வருது... என்னத்த சொல்ரது?

காந்தி எழுதிய "தென்னாப்ப்ரிக்காவில் சத்தியாக்ரகம்" புத்தகம் உங்களுக்காக.

Sep 26, 2007

மடை திறந்து....

நிழல்கள் படத்துல வரும் "மடை திறந்து"-- பாட்டு உங்களுக்கு பிடிச்சு இருந்தா இதையும் பருங்களேன்...


musiccodes online movies


இப்ப நிழல்கள் படத்துல வரும் "மடை திறந்து"

Nizhalgal - Madai Thiranthu Video Clip




Nizhalgal - Pon Maalai Pozhuthu Video Clip



Raaja Paarvai - Anthi Mazhai Pozhigirathu Video Clip

Sep 16, 2007

--> Cheers

புதுசா டீம்ல சேர்ந்தவுடன் அறிமுகம் பன்னிக்கிரதுக்காக ஒரு பார்ட்டி கொடுத்தாருங்க நன்பர்.

பார்ட்டினு சொன்னவுடனேயே, நல்லதம்பி மதிய சாப்பாட Cut பன்னிட்டார். கொடும என்னன்னா, மொத Class ஊத்தம்போதே சொல்லிட்டார் எல்லாருக்கும் மொத Class மட்டும் அவர் செலவாம் - இங்க அப்படித்தானாம். என்ன அர்த்தம்...என்ன வேனும்னாலும், எம்புட்டு வேனும்னாலும் குடிங்க ஆன செலவு உங்கது. நல்லதம்பி மூஞ்சி போன போக்க பாக்கனுமே....

ஏண்ட்ட கை குழுக்கிட்டு, ஹிந்தில நமஷ்தே, எப்படி இருக்கீங்க? அப்படின்னு கேட்டாருங்க..பாவம் இதுக்காக யார்ட்டயோ போயி கேட்டு மனப்பாடம் பன்னிட்டு வந்து இருக்கார். எனக்குதான் ஹிந்தி தெரியாதே...

எனக்கு கன்ன கட்டி, உள்ளுக்குல்ல கல்லூரி நாட்கள்ள ஹிந்திக்காக போரட்டம் பன்னுனது, எழுத்துக்கள தார் பூசி அழிச்சது, நடு ரோட்டுல சம்பந்தமே இல்லாம ஜெயவர்தனே பரம்பரயவே அசிங்கமா கத்துனது எல்லம் ஓடுது.

மெதுவா சொன்னேன்... எனக்கு ஹிந்தி தெரியாது. ஐரொப்பால பல நாடுகள்ல ஒரே மொழி பேசுரவங்க இருக்காங்க ஆன இந்தியால பல மொழி பேசுரவுங்க ஒரே நாட்ல இருக்கோம்.

இந்தியால இருந்து இப்ப 5 பேர் வந்து இருக்கோம், எங்களுக்குல்லேயே நாங்க ஆங்கிலத்தில்தான் பேசிக்குவோம். என் தாய்மொழி தமிழ், அவர் மழையாலம், அவர் தெழுங்கு, அதோ அவர் பஞ்சாபி. -- அப்படின்னு சொல்லி முடிச்சேன். மனுசன் விடுவார்னு பார்த்தா திரும்ப...

"நாட்டுக்குன்னு ஒரு மொழி இருக்குமே அது என்ன?"
"அது ஹிந்திதாங்க.."
"அப்ப உங்க எல்லருக்குமே உங்க நாட்டு மொழி தெரியாதா?"
"அப்படி இல்ல, என்னத் தவிர மித்தவங்களுக்கு எல்லாம் ஹிந்தி தெரியும்"

ஹ்ம்ம்ம் ...இப்ப என் மூஞ்சி போன போக்க பாக்கனுமே. அதுக்கு என்னங்க பன்ன முடியும்? இதுக்காக ஹிந்தி இனிமே கத்துக்க முடியுமா என்ன? புலி பசித்தாலும் புல்ல தின்னுமா?

சரின்னு பேச்ச மாத்த class-ல ஊத்தரத பாத்தேன். எல்லா பேரும் அவங்க அவங்க class எடுதுக்கிட்டு, "Cheers! Cheers! Cheers!" சொன்னோம். அப்பரம், Prost! Prost! Prost!-னு சொன்னாங்க...அது ஒன்னும் இல்ல ஜெர்மன்ல Cheers சொல்ராங்க.

அதோட விடல... மனுசன் எல்ல பேர்ட்டயும் இன்னிக்கு நம 6 மொழில சீர்ச் சொல்லர நல்ல பார்ட்டி.. அப்படின்னுட்டு என்ன சொல்ல சொல்றாரு.

தமிழ்ல Cheers-க்கு என்னங்க? நான் என்னத்த சொல்ரது? சத்தியமா எனக்கு தெரியலங்க... நாமதான் புலியாச்சே...

தமிழ் பழைய மொழி. எங்கள்ட்ட இப்படி தன்னி அடிக்கிர பழக்கம் இல்ல அதனால அப்படி ஒரு வார்தை இருக்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னேன். அவங்களுக்கு ஒரெ ஆச்சரியம்.

சரி உங்க மொழியில் இல்ல...அப்படின்னுட்டு அடுத்த நன்பர்கள சொல்ல சொன்னாங்க ... அவுங்களுக்கும் தெரியல...இல்லென்னு சொல்லி சமாளிச்சாச்சு.

அப்ப ஒரு தடிப்பய சனியனா கேட்டான்...
"நான் காம சூத்ரா படிச்சு இருக்கேன். அதுல இந்த மதிரி Alcohol இந்திய மக்கள் குடிக்கிறதா இருந்துச்சே?"

இதுக்கு என்ன பதில் சொல்ரதுன்னு தெரியாம முழிச்சப்ப அவுங்களே சரி விடுங்கன்னு Topic மாத்திட்டாங்க... அப்பா தலை தப்பியது தம்பிரான் புன்னியம்னு பெரு மூச்சு விட்டேன்.

தன்னிக்கு அப்பரம் எல்லாரும் சாப்ட போனோம். ஆரம்பிச்சுட்டங்கயா இங்கயும்.
"Guten Appetite! Guten Appetite! Guten Appetite!"-னு சொன்னங்க - இதுக்கு என்ன அர்த்தம்னா ... நல்ல சாப்பாடாக இருக்க வாழ்த்துரது.

என்னய தமிழ்ல சொல்ல சொன்னாங்க...இதுக்கு என்னங்க நான் சொல்ரது? எங்க அப்பா எப்பவும் சப்டரதுக்கு முன்னாடி சாப்பாட்ட கைல எடுத்து, கன்ன மூடி வாய்க்கும் மேல கைய உயர்த்தி காமிச்சுட்டு அப்பரம் சாப்டுவாரு. சின்ன புள்ளையா இருக்கும்போது கேட்டதுக்கு, "இன்னிக்கு பசிக்கு சாப்பாடு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ரது" அப்படின்னாரு.

புலியாச்சே... இத எடுத்து விட்டேன். அந்த தடிப்பய உங்களுக்கு கிடைச்சதுக்கு நீங்க நன்றி சொல்ரது சரி, நீங்க அடுத்தவங்கள வாழ்த்த மாட்டீங்களா?"

நீங்களே சொல்லுங்க புலி எத்தன தடவதான் மன்ன கவ்வுரது?


சரி இப்ப விசயதுக்கு வரேன் - கீழே உள்ள வார்தைகளுக்கு தமிழில் என்ன?

1) Cheers
2) காலை வணக்கம் (மாலை வணக்கம், etc) - அப்பட்டமான Good Morning- தமிழாக்கம். நமக்குன்னு வார்த்தை வாழ்த்துரதுக்குன்னு இருக்கா?

சந்தேகம்: அரசவையில் மன்னர் வரும்பொது வாழ்த்து சொல்லி பராக் பராக் சொல்ரத படங்கள்ல பாத்து இருக்கோம். தமிழில் மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்கள் சொல்லும் வழக்கம் இருந்ததா?

தெரிஞ்சா சொல்லுங்க...

Sep 15, 2007

--> திருத்துங்க நன்பர்களே!!










தப்பு செஞ்சா திருத்துங்க நன்பர்களே!!

ஆகஸ்ட் பதிவு "What I am doing in Germany" படித்த நன்பர்களுக்கு.........

படம் பாத்துட்டு, நல்லா enjoy பன்றீங்க அப்படின்னு எனக்கு சொல்லி மனசுக்குல்
- அவனுக்கு வந்த வாழ்வ பாரு...
- மவனே அவன் புத்திய காமிச்சுட்டான் பாரு...
- சம்பாதிக்க போனமா சேத்து வச்சமான்னு இல்லாம இப்படி தன்னிக்கு தன்னியா செலவலிக்கிரானே... இன்னம் என்ன என்னத்துக்கு செலவளிப்பான்...
- ஹ்ம்... என பெருமூச்சு விட்ட அன்ப, நண்பர் - களுக்கு,

ஏண்டா அங்க போயி நம்ப நாட்டு மானத்த வாங்குர அப்படின்னு யாராவது ஒருத்தர் நான் செஞ்ச தப்ப சொல்லி திருத்தக் கூடாதா?

என்ன பன்றது என்ன போலத்தான நீங்களும்... கொரஞ்ச பட்சம் நான் செஞ்சத அடுத்தவங்க செய்யாம இருக்க சொல்ரேன்.

Sep 5, 2007

Photo கேட்டதுக்காக

If the page is not opened, please press F5
நான் ஊரை விட்டு வந்தவுடன நன்பர்கள் கேட்டதுக்ககா இந்த மடல்s

மடல்-5
மடல்-4
மடல்-3
மடல்-2
மடல் - 1