Pages

Oct 1, 2007

காந்தி பிறந்த நாள்

நான் சமீபதில் பெர்லினில் உள்ள சார்லி செக்-பாயிண்ட் போயிருந்தேன். பார்வைக்காக வைத்து இருந்த பெர்லின் சுவர் அருகே பெரிய அருங்க்காட்சி சாலை இருந்தது. அதில் அனைத்து நாட்டு பெரிய தலைகளின் புகைப்படம் இருக்கும்போது காந்திக்கு சிலையே வைத்து இருக்கிறார்கள் - பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவில் மட்டுமே காந்தியை கொண்டடுவார்கள் என நினைத்து இருந்தது எவ்வளவு தவறு... உலகம் முழுக்க அவரை கொண்டாடுகிறார்கள்.

உண்மைக்காக தன்னையே புடம் போட்டுக்கொண்டவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியா போனேன். அதில் கீழே கண்ட வெளி இனைப்புகள் உள்ளது.
http://www.gandhiserve.org/
http://www.mahatma.org.in/
- இதில் நமது இந்திய இனைப்பில் Error வருது... என்னத்த சொல்ரது?

காந்தி எழுதிய "தென்னாப்ப்ரிக்காவில் சத்தியாக்ரகம்" புத்தகம் உங்களுக்காக.