Pages

Dec 25, 2010

மெயிலா...அனுப்புனியா?

தல... என்ன தல, mail அனுப்புனா பதில் அனுப்ப மாட்டயா? அவசரத்துக்கு ஒரு சந்தேகம் கேட்டா பதிலும் இல்ல, monbile not reachable...நேத்து எங்கதான் போன தல?

"...."

ஊர் உலகத்துல இருக்கற எல்லாப் பேரும் என்னய எப்படியாவது மில்லியனாராக ஆக்கியே ஆகனும்னு கங்கனம் கட்டிகிட்ட்து போல, Inbox -அ தொரந்தாலே, பெரிய பெரிய கம்பெனி

எல்லாம் லாட்டரி ஆரம்பிச்சு, எனக்கு பரிசு கொடுக்க மெயில் மேல மெயில் அனுப்புறாங்க.

இப்படி வந்து குமியிற குப்பை மெயிலில் எனக்குன்னு வந்த மெயில தேடிக் கண்டுபிடிக்கிறதே பெரிய வேலயா இருக்கு...

இது ஒரு பக்கம்னா, தெரிஞ்சவன், தெரியாதவன், தோழான், துறுத்தி எல்லாம் எனக்கு கைபேசி இலவசம், கம்ப்யூட்டர் இலவசம், அது, இது, எல்லாம் இலவசம் - அதுக்கு என்ன

பன்னனும்னா, இந்த மெயில நீங்களும் தெரிஞ்சவுங்களுக்கு, தெரியாதவங்களுக்கு அனுப்பனும் - அவ்வளவுதான் அப்படின்னு மறு பாதி மெயில்கள்.

தெரியாத ஆள்ட்ட இருந்து வர மெயில விடுங்க... தெரிஞ்சவங்கட்ட இருந்து வர மெயிலில் இருந்து எனக்கு கொஞ்ச விசயம் புரியலை:

1) அவங்களுக்கு வர மெயில படிச்சுட்டு அடுத்தவங்களுக்கு அனுப்புறாங்களா இல்ல வந்த உடன அடுத்தவங்களுக்கு போரமாதரி எதுவும் மோடிமஷ்தான் வேல செய்யுறாங்களா?

2) படிச்சாங்கன்னா... இன்னுமா இத நம்புறாங்க? இல்ல... "வந்தா மலை .. போனா ஒரு மெயிலு" -அப்படின்னு concept-ஆ?

3) அப்படியே நம்பர மாதிரி விசயம் இருந்த்ததுன்னா... ஒரு சின்ன சந்தேகத்துல google-ல அந்த மெயில் முகவரி இல்ல subject வச்சு ஒரு தேடு தேடுனா வந்த்து கொட்டப்போகுது

அந்த மெயிலோட ஜாதகம்... அப்பறம் அடுத்தவங்களுக்கு அனுப்பலாம்.

4) இப்படி குப்பயை அழிக்கிறேன்னு உங்க முக்கியமான தகவல் கேட்கும் மெயில படிக்காம அழிச்சுட்டா என்ன பண்றது?

.....

படிக்காமயே அவன் mail-அ குப்பைக்கூடைக்கு அனுப்பிட்டேன்னு எப்படி சொல்றது?