உதவியால் கிடைத்த நட்பு - விசித்திரக் கூட்டாளி
(அறம் செய விரும்பு)
டென்னசி, சட்டநூகா ஊரில் தமிழ்ப் புத்தாண்டு - காலையிலேயே பெரிய உற்சாகம்!
“நல்லதம்பி! சீக்கிரம் வா! கோவிலுக்கு தாமதம் ஆகுது!” என்று அம்மா கூப்பிட்டார்.
“அம்மா… நான் வந்துட்டேன்… ஆனா அண்ணன் என் காலனியை ஒளிச்சு வைச்சுட்டான் …” என்று நல்லதம்பி சிரித்துக்கொண்டே ஓடினான்.
“ஹா ஹா! நீ ஓடுறது ஆமை மாதிரி இருக்கு!” என்று அண்ணன் பழனி கிண்டல் செய்தான்.
இதுதான் நல்லதம்பியின் குடும்ப புகைப்படம்
அப்பா சிரித்துக்கொண்டு, “சரி சரி… எல்லாரும் சேர்ந்து போவோம். இன்று நல்ல நாள்!” என்றார்.
அவர்கள் அனைவரும் கோவிலுக்குப் போக காட்டு வழியாக நடந்துச்சென்றனர். அந்த காடு “நீதிவனம்” என்று அழைக்கப்பட்டது.
🌳 மர்ம சத்தம்!
திடீரென புதருக்குள் இருந்து ஒரு விசித்திரமான ஒலி. யானையின் பிளிறலும், மயிலின் அகவலும் கலந்த ஒரு வேதனை ஒலி அது!
“அம்மா… ஏதோ சத்தம் கேக்குதே…” என்று நல்லதம்பி நின்றுவிட்டான்.
“காற்று தான் இருக்கும்…” என்றார் அப்பா.
ஆனா மீண்டும் அந்த சத்தம்…அவன் நாய் பப்பு சுற்றிலும் பார்த்தது …
“அய்யோ… காப்பாத்துங்க…”
நல்லதம்பி பயந்து, “அப்பா! இது காற்று சத்தமில்லை!” என்றான்.
அண்ணன்: “அது பேயா இருக்குமோ?”
“அட பாவி! சும்மா இரு!” என்று அம்மா அடக்கினார்.
ஆனா நல்லதம்பி மட்டும் அந்த சத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தான்…அவனை பப்புவும் தொடர்ந்தது.
🦚 அற்புதமான கண்டுபிடிப்பு
ஒரு பெரிய மரத்தின் கீழ்…எதையோ பார்த்து பப்பு குலைத்தது …
ஒரு வித்தியாசமான உயிரினம் முள்ளிலும், செடிகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்தது!
அதுக்கு மயில் மாதிரி அழகாக சிறகுகள் இருந்தது…
ஆனா யானை மாதிரி உருவம் இருந்தது …
“அய்யோ! இது என்ன?” என்று நல்லதம்பி கண்கள் பெரிதாகியது.
அது மெதுவாக பேச ஆரம்பித்தது…
“தயவு செய்து… உதவி செய்யுங்கள்…”
நல்லதம்பி அதிர்ச்சியில்: “அட! இது பேசுது!” என்று அதிசியபட்டு காப்பாற்றினான்
🤔 மயிலானை யார்?
அந்த நேரத்தில் மரங்களின் மேலிருந்து ஒரு மெதுவான குரல்…அது அசரீரி குரல்!
“நல்லதம்பி… உன் உதவிக்கு பாராட்டுகள் - இது சாதாரண உயிரல்ல…”
“இது மயிலானை…இதற்கு அற்புத சக்திகள் உள்ளன…”
👉 மயிலானை:
இது பறக்கவும், நீந்தவும், ஓடவும் முடியும்
யாரையும் காயப்படுத்தாது
உதவி செய்யும்… ஆனால் கேட்டால் மட்டும்
மிகவும் பயந்த சுபாவம்
எந்த மொழியானாலும், தியானம் மூலம் இதுக்கு 10 நிமிடத்தில் பேச, படிக்க, எழுத தெரியும்
போராடத் தெரியாததால் உலகில் அழியும் தருவாயில் இருக்கும் உயிரினம்
😟 நல்லதம்பியின் மனப் போராட்டம்
அண்ணன்: “நல்லதம்பி சீக்கிரம் வா …late ஆகுது!”
அம்மா: “என்னடா பண்ற …. சீக்கிரம் வா?”
நல்லதம்பி மயிலானையை விட்டு விட்டு அண்ணனைப் பிடிக்க நாய் பப்பு உடன் ஓடினான் -
மயிலானை முள்ளினால் காயப்பட்டதால், “ஓடாதீர்கள், இந்த இடம் இணக்கு புதிது- என்னை காப்பாற்றுங்கள் என பயந்து அழுதது…
“நான் உங்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன்…” என்றது மெதுவாக.
அந்த கண்ணில் இருந்த பயம் நல்லதம்பியின் மனதை உருக்கியது.
சரி வா என்றான் நல்லதம்பி - மயிலானையும் அவன் தோளில் ஏறிக்கொண்டது. அனைவரும் கோவிலை நோக்கி நடந்தனர்
“நான் எப்போதும் உனக்கு உதவுவேன்…
நீ கேட்டால் மட்டும்!” என்று சிரித்தது மயிலானை..
❓ இந்தக் கதைக்கான கேள்வி
👉கடைஏழு வள்ளல்கள் யார்?
No comments:
Post a Comment