002-1-02 - தீயாய் பரவும் கோவம்
(ஆறுவது சினம் — கதை எண்: 002-1-02)
தமிழ்ப் புத்தாண்டு காலை — நாகேந்திரன் வீட்டிலும் உற்சாகம் தாண்டவமாடியது!
காரணம்? நாகேந்திரன் மீண்டும் தேர்வில் முதல் இடம்!
"என் பையன்தான் பள்ளியிலேயே முதல்வன்!" என்று அம்மா ஜெயம் , தொலைபேசியில் உறவினர்களுக்கு மூன்றாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
நாகேந்திரன் கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டே, "அம்மா, சினிமா எத்தனை மணிக்கு?"
முதல் rank-க்கு பரிசு — புதிதாக வந்த 'வீர விக்கிரமன்' படம். நாகேந்திரன் மனசு ஏற்கனவே திரையரங்கத்தில் இருந்தது!
அம்மா சொன்னார்கள் - நீ முதல் rank எடுத்த உடனே அப்பாதான உன்னய சினிமாக்கு கூட்டிட்டுப் போரேன்னு சொல்லி, நமக்கு முன்பதிவு பண்ணினார். அதனால சீக்கிரமே வந்துருவார் - நாம தயாரா கிளம்பி இருப்போம்.
🕐 நேரம் கடக்கிறது… கோவம் வருகிறது!
மூன்று மணி ஆனது. அப்பா வரவில்லை.
மூன்றரை மணி ஆனது. அப்பா வரவில்லை.
"அம்மா, அப்பா எங்கே?" என்று நாகேந்திரன் கேட்டான்.
"போன் செய்கிறேன்…" என்று அம்மா சொல்லி, அப்பாவை அழைத்தார்.
"ஜெயம் … கொஞ்சம் தாமதமாகும். அலுவலகத்தில் அவசர meeting. நீங்களே கிளம்புங்கள், நான் நேரடியாக திரையரங்கம் வருகிறேன்!"
நாகேந்திரன் முகம் சிவந்தது.
"என்ன?! அப்பா எப்பவும் இப்படித்தான் - அவரே போவோம்னு சொல்லுவார் அப்பறம் கடைசி நிமிசத்துல அவர் வரமாட்டார் — இப்போவா meeting?!"
"நாகு, புரிஞ்சுக்கோ…" என்று அம்மா சொல்ல வாய் திறந்தார்.
"வேண்டாம்! எனக்கு புரிஞ்சுக்கணும் இல்லை! எல்லாரோட அப்பாவும் சொன்ன சொன்னபடி பிள்ளைகளுக்காக வருவாங்க — என் அப்பா மட்டும் வர மாட்டாரு! எனக்கு சினிமாவே வேண்டாம்!"
அவன் குரல் உயர்ந்தது. அம்மா கண்கள் கலங்கியது.
ஒரு நிமிடம் வீட்டில் அமைதி.
அம்மா மெதுவாக சொன்னார்: "நாகு… உன் அப்பா உன்னை நேசிக்கிறார். அதனால்தான் உழைக்கிறார்."
"நேசிச்சா meeting வேண்டாம்னு சொல்லியிருப்பார்!" என்று நாகேந்திரன் அறையை விட்டு உள்ளே போய் கதவை அடித்து மூடினான்.
🎬 திரையரங்கம் — பரபரப்பான நுழைவு!
கடைசியில் அம்மாவும் நாகேந்திரனும் திரையரங்கம் சென்றனர். நாகேந்திரன் முகத்தில் கோபம் இன்னும் தங்கியிருந்தது.
உள்ளே நுழையும்போது திரையரங்க மேல்தளத்தில் சாளரத்தில் — ஒரு புறா அமர்ந்திருந்தது.
வழக்கமாக அந்த புறா அங்கே அமைதியாக தூங்கும். ஆனால் இன்று…
"கூ கூ… கூ கூ!" என்று சத்தமாக கத்தியது!
அருகில் நின்ற தேநீர் விற்பவர் ஒருவர் நெருங்க — படக்! என்று அவரை கொத்தியது!
"அய்யய்யோ!" என்று அவர் ஓடினார்.
"அம்மா பாரு! அந்த புறாக்கு என்ன ஆச்சு?" என்று நாகேந்திரன் தன் கோபத்தை மறந்து சிரித்தான்.
அம்மாவும் சிரித்தார்: "ஆமாம்… அது யாரையோ திட்டுது!" கொஞ்சநேரத்துல சரி ஆகிறும். அதுக்கு எதனாலேயோ கோவம் - யாருக்குமே கோவம் வந்தால் கொஞ்ச நேரத்தில் அது குரஞ்சுரும்.
நாகேந்திரனுக்கு திடீரென்று தனது நடவடிக்கை நினைவு வந்தது — தானும் கொஞ்சம் முன்பு இப்படித்தானே கத்தினேன்!
🍿 அப்பா வருகிறார் — கோவம் கரைகிறது!
படம் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆனது.
திடீரென் அருகில் ஒரு நிழல்!
அப்பா வந்திருந்தார்!
மூச்சுவாங்க ஓடி வந்தவர், நாகேந்திரன் கையில் ஒரு பெரிய பாப்கார்ன் பாக்கெட் வைத்தார். கூடவே சாக்லேட்டும்!
"Meeting விட்டவுடன் ஐந்து நிமிடம் ஓட்டுநர் மணிகண்டனை தேடினேன் - ஆளக் காணாம் - உனக்காக நானே கார ஓட்டிக்கிட்டு வந்தேன். தாமதமாகிவிட்டது… Sorry நாகு!" என்று அப்பா கிசுகிசுத்தார்.
நாகேந்திரனின் கோபம் — பாப்கார்னோடு சேர்ந்து உருகியது!
அம்மா அப்பா கையை அழுத்திப் பிடித்தார். அப்பா நாகேந்திரன் தலையை கோதினார்.
திரையருங்கு திரையில் வீரன் போராடினான். ஆனால் நாகேந்திரன் மனசில் ஒரு தோல்வி உணர்வு…
"என்னை நேசிக்கிறவங்ககிட்டே கோவப்பட்டேன்… அம்மாகிட்டே கத்தினேன்…"
இடைவேளையில் அம்மா தண்ணீர் வாங்க எழுந்தார்.
நாகேந்திரன் மெதுவாக சொன்னான்: "அம்மா… sorry."
அம்மா சிரித்தார். "ஏற்கனவே மறந்துட்டேன்! நீ இன்னுமா நினைச்சுக்கிட்டு இருக்க?”
அப்பா சிரித்தார்: "கோவம் வந்தது, போனது! அன்பிருந்தால் கோவம் கொஞ்ச நேரத்தில் ஆறிவிடும். நம்மையும் நேசிக்கிறவங்களிடம் கோவம் வந்தாலும் — அது நிரந்தரமா இருக்காது."
நாகேந்திரன் அம்மாவை பார்த்தான். அம்மா கண்ணசைத்தார்.
அன்பிருக்கும்போது சினம் ஆறும். பேரன்பு இருந்தால் சினமே வராது.
📱 திரையரங்கத்தில் ஒரு போன்!
இடைவேளை நேரம். நாகேந்திரன் கையில் போன் buzz ஆனது.
அவனுடன் படிக்கும் லட்சுமி அனுப்பியிருந்தாள்!
💬 "நாகு… நல்லதம்பிக்கு ஏதோ பிரச்சனை. இன்று காலை கோவிலுக்கு போய் வந்தவன், ஏதோ மயிலானை அது பறக்கும், பேசும், ஓடும், நீந்தும்னு என்னென்னவோ சொல்றான். பயமா இருக்கு…"
நாகேந்திரன் புருவம் உயர்ந்தது. உடனே வெளியில் வந்து லெட்சுமிக்கு கைபேசியில் பேசினான்
" லட்சுமி என்னவா இருக்கும்? நான் முதல் ரேங்க் வாங்கினதால பைத்தியம் பிடிச்சுருச்சோ?" - என்று சிரித்தான்
லட்சுமி: "சிரிக்காத நாகு! அவன் serious-ஆ சொல்றான்!"
நாகேந்திரன்: "சரி நாளைக்கு பள்ளியில பார்ப்போம். பாவம் நல்லதம்பி… அவனுக்கு மன நிலை சரி இல்லை போல!"
“இன்னிக்கு திரையரங்குல இருந்த ஒரு புறா கூட மன நிலை சரி இல்லாம கோவத்தில் பாக்குற ஆளை எல்லாம் கொத்துது…எல்லாம் புதுசா இருக்கு. சரி நாளை பார்ப்போம் ”
நாகேந்திரன் போனை வைத்தான். ஆனால் மனசில் ஒரு கேள்வி நுழைந்தது…
"மயிலானை… பறக்குமா? பேசுமா? இது என்ன மயிலானை கதை?"
திரையில் வீர விக்கிரமன் போராடினான். ஆனால் நாகேந்திரன் மனசு என்னவென்றே தெரியாத மயிலானையைப் பற்றி …அலைந்தது!
❓ கேள்வி பதில்
போன கதைக்கான பதில்
கடைஏழு வள்ளல்கள் யார்?
பாரி, காரி, ஓரி, சேரன் செங்குட்டுவன், பேகன், ஆய், நள்ளி
இந்தக் கதையின் கேள்வி
Alexander the Great – ஒரு கோப நொடி, நண்பன் இழப்பு
(அடுத்த கதையில் பதில் சொல்லு!)
(அலெக்சாண்டர் ஒரு விருந்தில் கோபத்தில் தனது நெருங்கிய நண்பர் Cleitus the Black-ஐ கொன்றதாக வரலாறு கூறுகிறது.
👉 முடிவு:
பிறகு ஆழ்ந்த வருத்தம்
நண்பன் திரும்ப வரவில்லை
பாடம்:
கோபத்தில் செய்த செயலை ஆயுள் முழுவதும் சுமக்க வேண்டி வரும்.)
No comments:
Post a Comment