Pages

Dec 25, 2025

ஆத்திசூடி

Noவருக்கம்Aathichoodi
1உயிர் வருக்கம்1 அறம் செய விரும்பு.
2உயிர் வருக்கம்2 ஆறுவது சினம்.
3உயிர் வருக்கம்3 இயல்வது கரவேல்.
4உயிர் வருக்கம்4 ஈவது விலக்கேல்.
5உயிர் வருக்கம்5 உடையது விளம்பேல்.
6உயிர் வருக்கம்6 ஊக்கமது கைவிடேல்.
7உயிர் வருக்கம்7 எண் எழுத்து இகழேல்.
8உயிர் வருக்கம்8 ஏற்பது இகழ்ச்சி.
9உயிர் வருக்கம்9 ஐயம் இட்டு உண்.
10உயிர் வருக்கம்10 ஒப்புரவு ஒழுகு.
11உயிர் வருக்கம்11 ஓதுவது ஒழியேல்.
12உயிர் வருக்கம்12 ஔவியம் பேசேல்.
13உயிர் வருக்கம்13 அஃகஞ் சுருக்கேல்.
14உயிர்மெய் வருக்கம்14 கண்டொன்று சொல்லேல்.
15உயிர்மெய் வருக்கம்15 ஙப் போல் வளை.
16உயிர்மெய் வருக்கம்16 சனி நீராடு.
17உயிர்மெய் வருக்கம்17 ஞயம்பட உரை.
18உயிர்மெய் வருக்கம்18 இடம்பட வீடு எடேல்.
19உயிர்மெய் வருக்கம்19 இணக்கம் அறிந்து இணங்கு.
20உயிர்மெய் வருக்கம்20 தந்தை தாய்ப் பேண்.
21உயிர்மெய் வருக்கம்21 நன்றி மறவேல்.
22உயிர்மெய் வருக்கம்22 பருவத்தே பயிர் செய்.
23உயிர்மெய் வருக்கம்23 மண் பறித்து உண்ணேல்.
24உயிர்மெய் வருக்கம்24 இயல்பு அலாதன செய்யேல்.
25உயிர்மெய் வருக்கம்25 அரவம் ஆட்டேல்.
26உயிர்மெய் வருக்கம்26 இலவம் பஞ்சில் துயில்.
27உயிர்மெய் வருக்கம்27 வஞ்சகம் பேசேல்.
28உயிர்மெய் வருக்கம்28 அழகு அலாதன செய்யேல்.
29உயிர்மெய் வருக்கம்29 இளமையில் கல்.
30உயிர்மெய் வருக்கம்30 அறனை மறவேல்.
31உயிர்மெய் வருக்கம்31 அனந்தல் ஆடேல்.
32ககர வருக்கம்32 கடிவது மற.
33ககர வருக்கம்33 காப்பது விரதம்.
34ககர வருக்கம்34 கிழமைப்பட வாழ்.
35ககர வருக்கம்35 கீழ்மை அகற்று.
36ககர வருக்கம்36 குணமது கைவிடேல்.
37ககர வருக்கம்37 கூடிப் பிரியேல்.
38ககர வருக்கம்38 கெடுப்பது ஓழி
39ககர வருக்கம்39 கேள்வி முயல்.
40ககர வருக்கம்40 கைவினை கரவேல்.
41ககர வருக்கம்41 கொள்ளை விரும்பேல்.
42ககர வருக்கம்42 கோதாட்டு ஒழி.
43ககர வருக்கம்43 கௌவை அகற்று.
44சகர வருக்கம்44 சக்கர நெறி நில்.
45சகர வருக்கம்45 சான்றோர் இனத்து இரு.
46சகர வருக்கம்46 சித்திரம் பேசேல்.
47சகர வருக்கம்47 சீர்மை மறவேல்.
48சகர வருக்கம்48 சுளிக்கச் சொல்லேல்.
49சகர வருக்கம்49 சூது விரும்பேல்.
50சகர வருக்கம்50 செய்வன திருந்தச் செய்.
51சகர வருக்கம்51 சேரிடம் அறிந்து சேர்.
52சகர வருக்கம்52 சையெனத் திரியேல்.
53சகர வருக்கம்53 சொற் சோர்வு படேல்.
54சகர வருக்கம்54 சோம்பித் திரியேல்.
55தகர வருக்கம்55 தக்கோன் எனத் திரி.
56தகர வருக்கம்56 தானமது விரும்பு.
57தகர வருக்கம்57 திருமாலுக்கு அடிமை செய்.
58தகர வருக்கம்58 தீவினை அகற்று.
59தகர வருக்கம்59 துன்பத்திற்கு இடம் கொடேல்.
60தகர வருக்கம்60 தூக்கி வினை செய்.
61தகர வருக்கம்61 தெய்வம் இகழேல்.
62தகர வருக்கம்62 தேசத்தோடு ஒட்டி வாழ்.
63தகர வருக்கம்63 தையல் சொல் கேளேல்.
64தகர வருக்கம்64 தொன்மை மறவேல்.
65தகர வருக்கம்65 தோற்பன தொடரேல்.
66நகர வருக்கம்66 நன்மை கடைப்பிடி.
67நகர வருக்கம்67 நாடு ஒப்பன செய்.
68நகர வருக்கம்68 நிலையில் பிரியேல்.
69நகர வருக்கம்69 நீர் விளையாடேல்.
70நகர வருக்கம்70 நுண்மை நுகரேல்.
71நகர வருக்கம்71 நூல் பல கல்.
72நகர வருக்கம்72 நெற்பயிர் விளைவு செய்.
73நகர வருக்கம்73 நேர்பட ஒழுகு.
74நகர வருக்கம்74 நைவினை நணுகேல்.
75நகர வருக்கம்75 நொய்ய உரையேல்.
76நகர வருக்கம்76 நோய்க்கு இடம் கொடேல்.
77பகர வருக்கம்77 பழிப்பன பகரேல்.
78பகர வருக்கம்78 பாம்பொடு பழகேல்.
79பகர வருக்கம்79 பிழைபடச் சொல்லேல்.
80பகர வருக்கம்80 பீடு பெற நில்.
81பகர வருக்கம்81 புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82பகர வருக்கம்82 பூமி திருத்தி உண்.
83பகர வருக்கம்83 பெரியாரைத் துணைக் கொள்.
84பகர வருக்கம்84 பேதைமை அகற்று.
85பகர வருக்கம்85 பையலோடு இணங்கேல்.
86பகர வருக்கம்86 பொருள்தனைப் போற்றி வாழ்.
87பகர வருக்கம்87 போர்த் தொழில் புரியேல்.
88மகர வருக்கம்88 மனம் தடுமாறேல்.
89மகர வருக்கம்89 மாற்றானுக்கு இடம் கொடேல்.
90மகர வருக்கம்90 மிகைபடச் சொல்லேல்.
91மகர வருக்கம்91 மீதூண் விரும்பேல்.
92மகர வருக்கம்92 முனைமுகத்து நில்லேல்.
93மகர வருக்கம்93 மூர்க்கரோடு இணங்கேல்.
94மகர வருக்கம்94 மெல்லி நல்லாள் தோள்சேர்.
95மகர வருக்கம்95 மேன்மக்கள் சொல் கேள்.
96மகர வருக்கம்96 மைவிழியார் மனை அகல்.
97மகர வருக்கம்97 மொழிவது அற மொழி.
98மகர வருக்கம்98 மோகத்தை முனி.
99வகர வருக்கம்99 வல்லமை பேசேல்.
100வகர வருக்கம்100 வாது முற்கூறேல்.
101வகர வருக்கம்101 வித்தை விரும்பு.
102வகர வருக்கம்102 வீடு பெற நில்.
103வகர வருக்கம்103 உ(வு)த்தமனாய் இரு.
104வகர வருக்கம்104 ஊ(வூ)ருடன் கூடி வாழ்.
105வகர வருக்கம்105 வெட்டெனப் பேசேல்.
106வகர வருக்கம்106 வேண்டி வினை செயேல்.
107வகர வருக்கம்107 வைகறைத் துயில் எழு.
108வகர வருக்கம்108 ஒ(வொ)ன்னாரைத் தேறேல்.
109வகர வருக்கம்109 ஓ(வோ)ரம் சொல்லேல்.

No comments:

Post a Comment