இந்த ஆணி புடுங்கர வேலய இங்க பாத்தது போதும், California போயி இதே மாதிரி வேலய பாருங்கன்னு அனுப்பிட்டாங்க.
--> நீங்க என்கூட வங்க ... போயி Temporary ID வாங்கிட்டு வந்துடலாம். அத நீங்க பத்தரமா வச்சுக்கனும். தொலச்சுடக் கூடாது. புது ID ரெண்டு நாளில்ல வந்துரும் அப்ப இந்த ID Carda கொடுத்துட்டு புதுச வச்சுக்கங்க...
==> சரி .. ID பத்தி தெரியும் ....
--> இந்த Document எல்லாம் படிச்சுப் பாருங்க... புதுசா ஒரு account-க்கு போறதுக்கு முன்னால அந்த அந்த accountu-க்குன்னு சில ரூல் இருக்கும். இது பூராம் இந்த account-க்குன்னு இருக்கு.
==> சரி... நான் ஏற்கனவே இருந்த account-ல இப்படிதன் இருந்தது.
--> நாளைக்கு 'Safety and Security'- அப்படின்னு ஒரு class நீங்க அட்டெண்ட் பன்னிட்டு இந்த mail id--க்கு ஒரு mail அனுப்பிடுங்க... நீங்க அனுப்புரத வச்சுத்தான் நீங்க security class clear-னு சொல்லுவங்க...
==> ok ... இது தெரியும். எங்கயும் உள்ளதுதான். எனக்கு எரிச்சலா இருந்துச்சு... பின்ன என்னங்க இவன் சொல்ரது எல்லாம் IT-ல சின்ன பாப்பாக்குக் கூட தெரியும் - இது Temporary Id, safety session அப்படின்னு சொன்னா பத்தாதா. பத்து வருச experience-க்கு எத்தன எடத்துல ஆணிய புடிங்கி இருப்போம். மிஞ்சி போனா இவனுக்கு என்ன மூனு வருச experience இருக்குமா?
--> அப்பரம் உங்களுக்கு Laptop இன்னும் கொஞ்ச நேரத்துல தந்துருவாங்க... அது வந்த உடன எனக்கு serial number details அனுப்புங்க...
==> சரி...
--> இது Client place அப்படிங்கறதால இங்க formal-ல தான் வரனும். அவங்க எப்படி வந்தாலும் நாம as per dress code தான் வரனும்
==> சரி ... சரி... நானும் client place-ல ரொம்ப நாளா வேல பாத்து இருக்கேன்...
-->இங்க இருக்குற Phone-ல ISD வசதி இருக்கு, அதுக்காக நீங்க இந்தியாக்கு பேசக் கூடாது - எதாவது பேசனும்னா அந்த call-அ குறிச்சு வச்சுக்கங்க - மாச கடைசில நீங்க எனக்கு அத அனுப்பிடுங்க.
==> எனக்கு எரிச்சல் தாங்க முடியல - இவன் என்ன நினசுக்கிட்டு இருக்கான்? ஏதோ நேத்திக்கு வேலைக்கு சேர்ந்தது போல நினைச்சுகிட்டு இருக்கானா? கோவம் மூக்குமேல வந்தாலும் அடைக்கிகிட்டேன். வந்த முதல் நாளே பேர கெடுக்க வேண்டாம்னு...
-->விளக்கமா சொல்லிகிட்டு இருந்தவன் அமைதியா இருக்கவே, வேற என்ன பன்னனும்?
--> அவ்வளவுதான் sir.
--> Ok. நான் உங்களுக்கு புது laptop detail அனுபினா சரிதான...?
-->Sir, நான் உங்க VISA detail-ம் அனுப்ப சொன்னனே?
--> எப்ப சொன்னீங்க? சரி அனுப்பிடரேன்
--> sir, நீங்க ரொம்ப account-ல வேல பாத்தவங்கன்னு நல்லா தெரியுது. எனக்கு எது எல்லம் உங்களுக்கு தெரியும்னு தெரியததனால, தெரிஞ்ச விசயத்த ரொம்ப விளக்கமா சொல்லி இருக்கலாம், எனக்கு என்னன்ன, எதோ ஒரு விசயம் தெரியாம இருந்து அத நான் விளங்கற அளவுக்கு சொல்லாம போயிடக் கூடாதே அப்படிங்கரதுதான். தவிர, உங்க அனுபவத்துல இத எப்படி இன்னும் நல்லா சுருக்கமா, விளக்கமா சொல்ல எதாவது suggestion இருந்தா சொல்லுங்க sir.
==> hmmm எவ்வளவு ஆனி புடுங்கி என்ன புன்னியம்...எனக்கு எது தெரியும் எது தெரியாதுன்னு அவனுக்கு சோசியமா தெரியும்? எனக்கு தெரியும் தெரியும்னு இருக்கரதுக்கு பதில கொஞ்சம் கவனிச்சு இருந்தா இவனுக்கு உபயோகமா எதாவது சொல்லலாம்...ம்ம்ம்
தல...உரையாடல் style நல்லா இருக்கு ..
ReplyDeleteAnnna parungha thala ...mind voice sha catch panrathu...roombha kastam ...than..
s... v r keep learning d things from various such events..
valthuzhal/...continue ur's
வாங்குன அடியும், கொட்டும் இங்கே
Rajkannu,
ReplyDeleteThanks for your comments. எப்ப எல்லாம் அடி வாங்குரனோ அப்ப எல்லாம் எழுத முயற்சிக்கிறேன்.
Poovs, nalla ezhudhareenga... will keep visiting your site
ReplyDeleteAnbudan, Subbu
I didnt expect comments from you....Thanks Subbu.
ReplyDeletenice and unga ezhuthu kanadi maadhiri ...ennudaiya mugamum therigiradhu sir ..
ReplyDelete