செய்ய வேண்டிய வேலைகளை மறப்பது போல, வார்த்தைகளை மறந்து உரையாடலை துறந்து அமைதியாய் இருக்கும் என்னை, உற்வினர்கள் நான் ஏதோ கெட்ட நேரத்தாலோ, பேயாலோ, பிசாசாலோ பாதிக்கப் பட்டு இருப்பதக நினைத்து அப்போது அங்கே புகழின் உச்சத்தில் இருந்த சாமியாரிடம், வற்புறுத்தி என் மனைவி அழைத்துப் போனார்.
பிரச்சனையின் ஆனிவேரே பிரச்சனையை தீர்க்க புரப்பட்டது.
அங்க போன உடனே டோக்கன் வாங்கனும், டோக்கன் நம்பெர் படி கூப்பிட ஒருத்தர் ஒருத்தரா போனாங்க. நல்ல வேல ரொம்ப நேரம் காக்க விடாம அடுத்த ஒரு மணி நேரத்துல என்னையும் கூபிட்டாங்க. ஏன்னா காலைல எழுந்த உடனே phon-ல என் மாமனர் book பன்னிட்டார்.
குடும்ப சகிதம உள்ள போனவுடன்... அவர் என் மனைவியைப் பார்த்து கொஞ்சம் வெளில இருங்கம்மா - ஏற்கனவே என்ன பிரச்சனைன்னு சொல்லீட்டீங்க ... நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்கள கூப்பிடரேன்..
--> சரி இப்ப சொல்லுங்க Sir...எப்படி இருக்கீங்க, எங்க வேல பாக்குறீங்க?
--> நான் நல்லா இருக்கேன் சாமி, எனக்கு ஒன்னும் இல்ல - என் மனைவிதான் உங்கள பாக்கனும்னு சொல்லி கூட்டிவந்து இருக்காங்க.
--> அப்படியா ஆளப் பார்த்தா நல்லா இருக்குற் மாதிரி தெரியலயே.. சரி நீங்களா சொல்லாட்டி பரவாயில்ல .. நான் கேக்குர கேள்விக்கு பதில் சொல்லுங்க.....எங்க வேல பாக்குரீங்க...
--> ஒரு MNC-ல இருக்கேன் சாமி (இவருக்கு MNC-ன்னா என்ன தெரியும்...?)
--> MNC-ன்னா சம்பளம் நல்லா வருமே...எதுல வேல பாக்குறீங்க softwar இல்ல PPO -வா? Bangalore தான இல்ல Pune வா?
--> நான் அரண்டு போயிட்டேன் - சுத்தமா இந்த கேள்விய இவர்ட்ட எதிர்பார்க்கல...
--> software-தான்...
--> ஏன் software-ல வேல பாக்குறவங்க எல்லா பேரும் முத நாளே யார்ட்டயும் மனசு விட்டு சிரிச்சு பேசமாட்டோம், எதையோ தொலச்சது மாதிரிதான் எப்பவும் இருப்போம்-னு எழுதி கொடுத்துட்டுதான் வேலைக்கு சேருவீங்களா என்ன? ஏன் கேக்குரேன்னா நேத்திக்கு ஒரு பையன அவங்க அம்மா கூட்டிட்டு வந்து இருந்தாங்க அவண்ட்டயும் இதே problem-தான்... எனக்கு இந்த எடத்த மூடிட்டு சென்னை, bangalore-னு போயி 'counselling' பன்னலாமான்னு தோனுது.
-- எனக்கு என்ன சொல்ரதுன்னே தெரியல.. அவர் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கார்..
--> என் பையன Annamalai universitty-ல சேத்து விட்டு இருக்கேன். அவனுக்கு கொடுத்த ஒரே advice - அப்பா சாமி, மெசின பத்தி படி ஆனா மெசினே உலகம்னு போயிடாத.. அத தாண்டி அடுத்தவன் சிரிச்சா சிரிக்கனும், அடுத்தவன் சிரிக்காட்டாலும் சிரிக்க வைக்கனும்.. அதே மாதிரி அடுதவனின் வலி தெரியனும்... சும்மா computer சொல்லுது அதனால இதுதான் சரி அப்படின்னு நாலு அஞ்சு வருசம் படிச்சுட்டு, இந்த 18 வருசமா கத்துக்கிட்டத மறந்துட்டு வந்துடாத.. அப்படின்னு
--> (எனக்கு என்ன சொல்ரதுன்னே தெரியல்...இவர் சாமி, பூஜை, புனஷ்காரம்னு எதுவும் சொல்ல்ரமதிரி தெரியல)... சரிங்க சாமி ... எனக்கு ஒன்னும் இல்ல அப்ப நான் வரவா...
--> இருங்க... நீங்களே பாருங்க .. எவ்வளவு பேர் டொக்கன் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருக்காங்கன்னு?... நான் தான் சொல்லனும் கிளம்புங்கன்னு. சரி இப்ப சொல்லுங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் பேசினா உங்களுக்கு போரடிக்குது.
--> சாமி பிரச்சனைன்னு ஒன்னும் இல்ல சாமி..
--> ரொம்ப நல்லதுங்க... நீங்க நம்புனா நம்புங்க... இன்னைக்குதான் பிரச்சனை இல்லாத மனுசன பாத்து இருக்கேன். இத்தன நாள அந்த ஆண்டவன வேண்டுனது வீன் போகல - இப்படி ஒரு மனுசன என் கன்னுல கட்டிட்டார். நீங்க போகலாம்ங்க எனக்கு ரொம்ப சந்தோசம். ஒரெ ஒரு கேள்வி...இதுக்கு முன்னடி 'பாமா ருக்மினி' பாக்யராஜ் படம் பார்த்தபோது வ்யிரு வலிக்கிறமாதிரி, கன்னுல இருந்து தண்ணி வர மாதிரி சிரிச்சீங்களே ... அதுமதிரி கடைசியா எப்ப சிரிச்சீங்க?
--> (எனக்கு shock அடிச்ச மாதிரி இருந்துது - அப்ப சின்ன வயசு - சூது வாது இல்லத வயசு - சட்டுன்னு சிரிப்பு - சட்டுன்னு கோவம் - ஆனா சிரிச்சதுதான் அதிகம்...என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏன்னா இந்த கேள்விக்கு பதில்தான் இல்ல ... அப்படியே திரு திருன்னு முழிச்சேன் ...ஆனா அவர் மேல மதிப்பு ரொம்ப கூடிப் போச்சு....)
--> பிரசனையும் இல்ல ஆனா சிரிக்கவும் இல்ல... ஏன் சார் சிரிக்கரது இல்ல? நல்ல பையன், பொன்னு பருங்க நாலு மாசத்துல எப்படி சிரிக்க கத்துக்கிட்டு இருக்கு?
--> சாமி - பிரச்சனை அப்படின்னா...சரி நானே சொல்றேன்... என் மனைவிக்கு எது பெரிய விசயம் எது சின்ன விசயம்னு தெரிய மாட்டேங்குது... சின்ன சின்ன விசயதுல கவனம் செலுத்தி பெரிய விசயங்கள கொட்டை விடற்து மட்டும் இல்லாம, புதுப் புது பிரச்சனய எனக்கு கொண்டு வராங்க.. ஒரு பக்கம் அம்மா இன்னொரு பக்கம் மனைவி - ரெண்டு பேருமே அவங்களுக்குள்ள அனுசரிச்சு போரது இல்ல... இவங்க ரெண்டு பேர் செய்ரதுமே எனக்கு எரிச்சலும் கோவமும் ஆகி சந்தொசமே இல்லாம போச்சு....இப்ப வாழ்க்கயே பிடிக்கல...
--> இதத்தான நான் மொத கேள்வியா கேட்டேன். ஏன் எல்லாரும் பிரச்சனைய பேச சங்கட படுரீங்க... படிசவங்களுக்கு நாங்க என்ன புதுச செஞ்சுட போரோம்னு நெனப்பு... அப்படி இருக்குரவங்க வந்து இருக்க கூடாது... வந்தாச்சுல்ல, வந்தீங்கன்ன வந்த விசயத ஒழுங்கா முடிசுடனும்.
--> இப்ப எனக்கு தெரியாத விசயத்த கேக்குரேன் ... நீங்கள் பதில் சொல்லுங்க ...எனக்கு இல்ல ... உங்களுக்குள்ள ... பதில் சொன்ன உடன தலயை ஆட்டுனா போதும் நான் அடுத்த கேள்விக்கு போயிருவேன்
--> நீங்க உங்க கல்யனத்தப்போ என்ன படிசு இருந்தீங்க, எவ்வளவு சம்பளம் வங்கிக்ட்டு இருங்க்தீங்க?
...
--> உங்க மனைவியும் ஆரம்ப காலத்துல வேலைக்கு போனதா சொன்னாங்க... அவங்க எவ்வலவு சம்பளம் வங்கினாங்க?
...
--> இப்ப உங்க Qualification என்ன?
...
--> நீங்க தினம் தினம் புது புது ஆட்களை பார்க்கிர மாதிரி அவங்களும் புது புது ஆள பார்க்க கூடிய சூல்நிலைல இருக்காங்களா?
...
சரி - எல்லாத்துக்கும் பதில் நீங்க உங்களுக்குல்லேயே சொல்லிட்டீங்க. எனக்கு விடை வந்தாச்சு. இப்ப சொல்லுங்க நீங்க் உங்க வட்டத்த பெருசு பன்னிக்கிட்டே போனீங்க ஆனா உங்க மனைவிக்கு, அம்மாவுக்கு அந்த வாய்ப்பு இல்ல. ...
நல்லா தெரிஞசுக்கோங்க நீங்க ரொம்ப முக்கியம் அவங்க ரெண்டு பேருக்கும். வேனும்னு யாரும் கெட்டது பன்றதில்ல...
- கெட்டதுன்னே தெரிஞ்சு நீ 9th படிக்கையில் மலையாலப் படம் பாக்க போகல? அதுவும் monthly test cut பன்னி?
-->(திடீர்னு மரியாத கொரஞ்சு நீ-ன்னு பெச ஆரம்பிசுட்டர் - ஆன அது தப்பா தெரியல..)
- கெட்டதுன்னே தெரிஞ்சு test-அ நிறுத்தனும்னு பள்ளிக்கூடத்துல 'பூனக்காலி' விதைய பென்ச்ல தடவி எல்லப் பேரும் அரிக்குது அரிக்குதுன்னு துடிக்க விடல?
- கல்லூரில படிக்கும்பொது நீ தங்கியிருந்த எடத்துல 'Lab' வைக்க வந்த அய்யரை, முத நாளே உள்ள நொலையும்போது நாலனாவ பல்ப்க்கு இடையில வச்சு அவங்க switch போடரப்ப எல்லம் பியூஷ் போக வச்சு, அவங்கள்ட்டயே ராசி இல்ல அப்படின்னு சொல்லி காலி பன்ன வைக்கல?
- இப்ப வெளில இருந்து வரும்பொது குடியும் குடிதனமும நல்லா இருக்குர உன் தோழனுக்கு ஷிவாச் ரீகல்- இந்தா பிடி அப்படின்னு கொடுத்து புருசன் பொண்டாடிக்குல்ல சண்டை வர வைக்கல?
-- நீங்க Stephen R. Covey,Brian Tracy,Antony Robinson அப்படின்னு என்ன என்னவோ புத்தகங்கள படிக்கிரது சரி... கொஞ்சம் ஆத்திசூடி, பஞ்சதந்திர கதைகள், திருக்குரல், இதெல்லம் படிக்க நேரம் ஒதுக்கு ...
- சாமி சாமி போதும் சாமி - இன்னும் நான் செஞ்ச தப்ப எல்லம் லிஷ்ட் பொடவேனாம்... நான் கேக்கவந்தது சரியாகல அப்படின்னாலும் சரி - லிஷ்ட் போட்டது பொதும். தப்பா எடுத்துக்காதீங்க... நான் கல்லூரி படிச்சு முடிச்சதுமே அந்த ஊர விட்டுட்டு போயிட்டேன் - உங்களுக்கு எப்படி இப்படி சரியா சொல்ல முடியுது?
-- அட லூசு, இன்னுமா நான் தந்தரம் மந்தரத்துல இத சொன்னேன்னு நினைக்க்ர? அட நாந்தாண்டா சித்தன் - 9வதுல சேர்ந்து படிச தோழன். இதுல பாதி விசயதுல நானும் இருந்து இருக்கென் - பாதி சொல்ல கேட்டு இருக்கென்.
-- நீ கல்லூரில படிச்சியே...
-- அமாம் நீங்க எல்லாம் B.Sc போனீங்க, நான் BA போனேன் - அந்த காலத்துல campus interview-ன்னா என்னன்னே தெரியாது - என்ன செய்ரது? அப்பாவோட தொழிலை நான் எடுத்துக்கிட்டேன். ஜாதகம் பாக்ரதும் ஒரு கனக்குத்தான்...மத்தபடி எங்க ஒன்னுக்கு போன, எந்த மூலைல எச்சிய துப்புனன்னு எல்லாம் சொல்ல முடியாது...சரி உன் வீட்டுக்கார அம்மாவையும் கூப்பிடு இங்க...
-- இந்தாங்கம்மா, ஐயாக்கு மனசுல கொஞ்சம் பிரச்சன இருக்கு... அது மந்தரத்துலயும் தந்தராதுலயும் சரியாக்க முடியாது. வெள்ளி வெள்ளி ஒரு பத்து கிழமை அனுமார் கோயிலுக்கு பொயி அர்ச்சனை பன்னுங்க. இந்த ஜாதகதுக்கு அடிக்கடி வெளில ஜாதகத்தையும், கை பார்க்க உள்ளங்க் கையும் காட்ட கூடாது - அந்த பவர் போயிரும். நீங்க அவர் மனசு அறிஞ்சு நடந்துக்கங்க... இவர் வீட்ட சேர்ந்தவங்க கிட்ட இவருக்காக அனுசரிச்சு போங்க, இவருக்கு இப்ப நேரம் சரி இல்ல - சின்ன சின்ன விசயத்த எல்லாம் பெரிசு பன்னினீங்கன்ன - அப்பரம் இவர நீங்க ராமேஷ்வரம், பழனின்னு போயி தேடவவேண்டி வரும் ... கொஞ்சம் முத்துச்சுன்னா காசி பக்கம் போக கூட வாய்ப்பு இருக்கு - அப்படி இல்லன்ன heart attack வரலாம் - இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது... என்ன புரிஞ்சதா ... அவர் ஒன்னும் உங்க வாழ்க்கையா பாலாக்கிர ஆள் இல்ல... போங்க ... போயி சந்தோஷமா குடும்பத்த நடத்துர வழிய பாருங்க...இங்க நான் சொன்னது சரியான்னு அடுத்த ஜோசியருட்ட போயி காமிச்சு நேரத்த வீனாக்காதீங்க.
--இந்தாங்க சாமி தட்சன...
-- வேண்டாம் - பிரச்சன புருசன் பொண்டாட்டிக்குல்ல இறுக்கரதுனால எனக்கு ஒன்னும் தட்சன வேண்டாம்... sir நீங்க குடும்பத்தோட போயி இந்த காசுல ஒரு படம் பாத்துட்டு வீட்டுக்கு போங்க.
-- > இது என்னங்க சாமின்னா, அம்மன் கோயிலுக்கு போயி என்னை விளக்கு போட்டுடு பொங்க, இல்லன்னா சிவன் தரிசிங்க, அனுமாருக்கு மாழை போடுங்கன்னு சொல்வங்க - இவரு என்னன.. காசும் வங்கல கோயிலுக்கும் போக சொல்லாம சினிமாவுக்கு போக சொல்றாரு?
- 'ஓஷொ' அப்படின்னு ஒரு சாமியார தெரியுமா? - அவரும் இப்படிதான் சொல்வாராம்....
- அட சீய், sex சாமியார்தான.
No comments:
Post a Comment