
ஏற்கனவே ரத்தக்கொதிப்பு அதிகமாகி அதுக்காக நடையா நடந்துக்கிட்டு இருக்கறப்ப இப்படி பேய நேர்ல பாத்தா என்ன ஆகிறது ... அப்படியே மயக்கம் வர மாதிரி இருக்கவே அங்க இருந்த சோபால தட்டுத் தடுமாறி உட்கார்ந்தேன்.
சததம் கேட்டு திரும்பிய அந்த பேய் பயந்து போயி டக்குன்னு முகமூடிய எடுத்தா... அட அது அழகான பொன்னுங்க...அந்த அழகுக்கே எல்லாப்பேரும் மயங்குவாங்க.. கொஞ்ச நேரத்துல நான் சாதாரனமான உடனே ரொம்ப சிரிப்பு தாங்கமுடியல அவங்களுக்கு ...யூ ஆர் பன்னி.. அப்படின்னு கெக்கலி கொட்டி சிரிச்சுக்கிட்டே சொல்றாங்க. என்னத்த சொல்ற்து?
நைசா கேட்டேன், ஏங்க மோனலிசா மாதிரி அழகா இருக்கற நீங்க ஏன் இப்படி பயமுறுத்தர மாதிரி... அதுவும் அலுவலக நேரத்துல?
இன்னிக்கு '"Halloween" தெரியாதா? எல்லாப்பேரும் இப்படித்தான் இன்னிக்கு இருப்போம்... ஏன் வீட்டுக்கே இப்படி dress பன்னிவிடுவோம். 'Hi.. Come here... you see.. one more witch..."
பக்கத்து அறையிலிருந்து இன்னொரு சூனியக்காரி.. இதுவும் அழகிய சூனியக்காரிதான் ... ஆனா அந்த அளவு பயமுறுத்த்ல...படத்துல பாருங்களேன்.

==> இந்தியாவில் இப்படி எல்லாம் இல்லையா?
--> "Halloween" அப்படின்னு தனியா இல்ல.. ஆனா ரொம்ப காலத்துக்கு முன்னாடி நெஜமாவே அரக்கர்களும், சூனியக்காரிகளும் இருந்ததாகவும், அவங்களை எல்லாம் எங்கள் கடவுள்கள் அழித்ததாகவும் சொல்லி அந்த நாளை கொண்டாடுவோம். Nov.5 அதுதான்.
No comments:
Post a Comment