- தலைவா சௌக்கியமா?.... நல்லதம்பி புயல்போல வந்து கேட்டான்.
- சௌக்கியத்துக்கு என்ன கொரைச்சல். சொல்லு என்ன விசயமா வந்த?
சனிக்கிழமைல அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.
ஓ...பொழுது போகலைனா என் பொழுத வீனாக்க வந்துடுவையா?
அதுக்கில்ல தல... நேத்து நைட்டெல்லாம் தூங்கள..
ஏன்? மப்பு ஜாஸ்தியா?
நான் serious-ஆ பெச வந்து இருக்கேன். நேத்துதான் எனக்கு விசயம் தெரியும். உலக பணக்காரங்க லிஸ்ட்ல இந்தியர்கள் ரொம்ப பேரு லிஸ்ட் ஆகி இருக்காங்க தெரியுமா?
ஓ... அப்படியா?
தெரியுமா! தெரியாதா!! தெரியாட்டி forbes web site பாரு தலை. உனக்கு தெரியும்... உனக்கு தெரியும்
சரி... அதுக்கென்ன?
Night full analysis தான். அவங்க எப்படி பணக்காரங்க லிஸ்ட்ல வந்தாங்க தெரியுமா? அவங்க வச்சுருக்க shares மதிப்பு கூடுதலானதால...
சரி... அதுக்கென்ன?
so, நானும் share ல இறங்கறதா முடிவு பன்னிட்டேன்.
முடிவே பன்னிட்டயா? ஏர்கனவே கைய சுட்டுக்கிட்டவங்கட்ட பேசிப்பார்த்தயா?
நேர இங்கதான் வரேன் தல. அவங்க எல்லாம் Plan இல்லாம தலையிட்டு கைய சுட்டுக்கிட்டவங்க. நான் அப்படி இல்லை - plan பன்னி பன்னுவேன். அதுக்கு என்ன பன்னனும் தல?
- சரி. Share பதி உனக்கு என்ன தெரியும்?
- தெரிஞ்சுக்கதான வந்து இருக்கேன்...
- கிழிஞ்சு போச்சு...
- Encourage பன்னு தல - insult பன்னாத.
- சரி புத்தகம் படிக்கிர பழக்கம் உண்டா?
- ம்... படிப்பனே....
- எந்த மாதிரி புத்தகம் படிப்ப?
- தேவி, ராணி, குமுதம், ஆனந்த விகடன் அப்பரம் பலான புத்தகம் எல்லாம் படிப்பேன் தல.
- அட லூசுப்பயலே....18 வயசுல பலான புத்தகம் படிச்ச சரி... இப்ப வயசு 30க்கு ஆச்சேடா... இன்னும அதையே படிக்கிற?
- தல இப்ப இங்கிலீஸ்ல படிக்குரொம்ல.
- நல்ல முன்னேற்றம். சரி அப்ப இங்கிலீஸ்ல ஏதோ புத்தகம் படிக்கிற. Good. முதல்ல Rich Dad Poor Dad புத்தகத்த படி.
- இதப் படிச்சா Share expert ஆஹிடலாமா தல?
- இது பணத்த பத்தி தெரிஞ்சுக்க - முதல்ல இதப் படி அப்பரம் share பத்தி பாக்கலாம்.
- ஏந்தல உனக்கு எப்பவுமே தலய சுத்தித்தான் மூக்க தொடத் தெரியுமா? share பத்தி விசயத்த சொல்ல சொன்னா வேர விசயத்த படிக்க சொல்ர... சரி எனக்கு time ஆச்சு... அடுத்த வாரம் வரேன் - முடிஞ்ச வரைக்கும் இந்த புத்தகத படிசுட்டு வரேன். நீ அதுக்குல்ல share பத்தி ஒரு Class எடுக்க prepare பன்னிக்க....
This comment has been removed by a blog administrator.
ReplyDelete