ட்'ரிங்க்...ட்'ரிங்க்...ட்'ரிங்க்...
செல்போனில் நல்லதம்பி நம்பர் தெரிய நிம்மதி பெருமூச்சு விட்டேன். அப்பா இன்னிக்கு போனோட போச்சு... நேரடித் தொல்லை இல்லை.
ஹலோ...
சொல்டா.. சௌக்கியமா?
என்ன தலை. சௌக்கியமா? எழுந்துட்டய? 7 மணிக்கு எழுந்துட்டியா இல்லயான்னு ஒரே டவுட்டு எனக்கு...
எழுந்துட்டேன் எழுந்துட்டேன் சொல்லு.
அதுக்கு ஏன் தலை சலிச்சுக்கர...சௌக்கியமானு கேட்டதுக்கு இந்த பாடா....?
சௌக்கியம்தான். சொல்லு நீ எப்படி இருக்கிற?
நான் நல்ல இருக்கேன் தலை...
என்ன விசயம்?
- என்ன தலை எப்ப பாத்தாலும் என்ன விஷயம் என்ன விஷயம்னு? எத்தனை தடவை சொல்ரது? தலைட்ட பேச விசயம் இருந்தத்தான் பேசனுமா?
- நான் அதுக்கு சொல்லலைடா ... காலைல விடிஞ்சும் விடியாம போனெ பன்னி இருக்கியே அதுக்கு கேட்டென்.
- ஒன்னும் இல்ல தல. உன் வீட்டு காலிங்க்பெல் ரிப்பேரா? நானும் 10 நிமிஷமா அடிச்சுக்கிட்டே இருக்கேன் சத்தமே வரல....
- அட... நீ எங்க இருக்க?
- உன் வீட்டு வாசல்லதான்.
ம்... நான் நினச்ச மதிரி போனோட போகப்போரதில்லயா...
- என்ன தல யோசனை? நான் பொய் சொல்ரேன்னு நினச்சியா? வந்து கதவ தொற தல - முக்கியமான விசயம் பேசனும். ராத்திரி பூராம் தூங்காம... விடிஞ்சதும் வந்தா வாசல்லயே நிக்க வச்சு பேசிகிட்டு இருக்குர...
- சாரிடா
- சொல்லு எப்படி இருக்க? என்ன விசயம்னு கேட்ட கோவம் வந்துரும் உனக்கு... இருந்தாலும் சொல்லு - என்ன விசயம்?
- தல நம்ம குமாரு இல்ல தல புதசா எங்க ரூமுக்கு வந்து இருக்கானே... குள்ளம- Oracle-ல இருக்கனே தல... மனசுக்குள்ள அவந்தான் Oracle-ல கண்டுபிடிச்ச மாதிரி...
- தெரியலயேடா...
- போ தலை... எல்லாத்தையும் மரந்துடு... அன்னிக்கு நான் அறிமுகப் படுத்தினேனெ...
- சரி சரி விசயத்த சொல்லு
- ராத்திரி தூங்கும்போது குறட்ட விட்டான் தல, என்னால தூங்க முடியல. கொஞ்சனேரம் பொருத்துப் பார்த்தேன் தல - முடியல - உசுப்பி விசயத்த சொன்னேன் - குரட்ட விடாம தூங்கு - எங்களுக்கு தொந்தரவா இருக்குன்னு..
அவன் சரின்னுட்டு திரும்பி தூங்கும்போது குறட்ட விட ஆரம்பிச்சுட்டான். என்னால தாங்க முடியல, ராத்திரி பூரம் யோசிச்சு இங்க வந்து இருக்கேன் தலை. இதுக்கு ஒரு முடிவு கட்டனும்தல.
- சரி அதுக்கு என்னடா பன்ன முடியும்? என் ரூம்ல தங்கபோரேன்னு சொல்லப் போரியா? அது எல்லாம் ஒத்து வராது. உங்க சங்காத்தமே வேண்டாம்னுதானே நான் தனியா வந்து இருக்கேன்...
- சே ... சே... அது இல்ல தல
- பின்ன?
நீயும் நல்லா குறட்ட விடுவ தல. நீ தூங்கும்போது 10 டன் லாரி ரோட்டுல போனா வரும் சத்தம் மதிரி குறட்ட விடுவ. நான் ஏர்கனவே உண்ட்ட கேட்டு இருக்கன்ல "உன் குறட்ட சத்ததுல அன்னி எப்படி தூங்கராங்க?"-ன்னு.
அது எப்படி தல? அந்த ரகஸியத்த மட்டும் சொல்லு தல. மவனே நான் விடர குறட்டைல அந்த குமாரு தூக்கத்தியெ மரக்கனும் தல ... என்ன நான் சொல்ரது?
No comments:
Post a Comment