இன்னிக்கு சனிக்கிழமை - அந்த கடன்காரன் வந்தாலும் வந்துருவான் என நினைக்கும்போதே அழைப்பு மணி அழைத்தது.
- தலைவா காலை வணக்கம் தலைவா (வேற யாரு... நினைச மாதிரி நல்லதம்பிதான்)
- வா வா வணக்கம். சௌக்கியமா? என்ன விசயம்?
- என்ன விஷயமா? F1-அ பாக்க வரக்கூடாதா?
- F1-ஆ
- ஆமா தல. ஹெல்ப் கிங்குல்ல நீ.
- அட லூசு... இன்னும் F1-லதான் இருக்கியா? இப்ப எல்லாம் யாரும் F1 உபயோகப்படுத்துரதே இல்ல. எல்லாமே Google தான். நீ எப்பத்தான் காலத்தோட சேர்ந்து வரப்போர? இன்னும் கொஞ்ச நாள்ள அந்த பட்டனயே எடுக்கப் போராங்க...
- ஆமா தல! நான் கூட Google-தான் use பன்றேன்.
- இப்ப இன்ன விளம்பர படமா எடுக்குராங்க? வந்த விசயத்த சொல்லு.
- தல நான் லீடரா ஆகனும்னு முடிவு பன்னிட்டேன் தல.
- நீ முடிவு பன்னினது சரி. உன்ன Company-ல்ல லீடரா ஆக்கனும்.
- ஆம தல. நேத்துத்தான் Lead டிச்சுஸ் பன்னினார். 8 வருச experience-க்கு இன்னுமா code எழுதுரது?
- நீதான் கோடு போட சொன்ன ரோடு போடுர ஆளாச்சே. உனக்கு என்ன பிரச்சனை?
- அதுதான் பிரச்சனை. அவன் ஒன்னு சொன்ன நான் ஒன்னு செய்ரனாம். அந்த தருதலை சொல்ரான் தல. ஒன்னு தெரியுமா தல, அவனுக்கு ஒரு மன்னும் தெரியாது. ஒரு Recurssion function எழுதுடான்னா முழிப்பான். ஆனா எல்லார்ட்டயும் இளிச்சுக்கிட்டே என்ன பன்னுன, என்ன பன்னுனன்னு கேட்டுட்டு status call-ல எல்லாம் தான் புடுங்குன மாதிரி பேசிட்டு புதுசா commit பண்ணிட்டு எங்க உயிரை எடுப்பான் தல.
- சரி... சரி... எல்ல இடத்துலயும் இப்படித்தான். விடு.
- அதுக்குத்தான் தல நான் Lead ஆகுரதா முடிவு பன்னிட்டேன். இப்ப சொல்லு தல Lead ஆகுரதுக்கு என்ன பன்னனும்?
- நான் கொடுத்தா "Think and grow rich" படிச்சாச்ச?
- படிச்சேன் தல. ஆஅனா முடிக்க முடியல. வேல ஜாஸ்தி.
- வேல ஜாஸ்தின்னு சொல்ர ஆனா எப்ப பார்த்தாலும் Ear phone மாட்டிகிட்டு பாட்டு கேட்டுகிட்டே இருக்க?
- கேட்டுக்கிட்டே வேலை பார்ப்பேன் தலை. அது பிரச்சனை இல்ல.
- சரி அப்ப இந்த Covey- யோட Powerofthe7Habits பாட்டு கேக்குர மாதிரி கேளு.
http://contactpoov.googlegroups.com/web/Covey-Powerofthe7Habits1of4.zip?gda=vHFBsFAAAACc1dLKwGBFPNX5ijbLNhevifTbiKDvqSZdV9pyywrWqmG1qiJ7UbTIup-M2XPURDT_INNE_pmiaSmw_BkDGUA_luCQS4665b9r4HfcXn4N6g
http://contactpoov.googlegroups.com/web/Covey-Powerofthe7Habits2of4.zip?gda=n-tZZVAAAACc1dLKwGBFPNX5ijbLNhevf6DpgIrpLgKUerTiEVPDwWG1qiJ7UbTIup-M2XPURDT_INNE_pmiaSmw_BkDGUA_cw0A_fRbcgWMtnGxC0xRpA
http://contactpoov.googlegroups.com/web/Covey-Powerofthe7Habits3of4.zip?gda=9J1QXFAAAACc1dLKwGBFPNX5ijbLNhevifTbiKDvqSZdV9pyywrWqmG1qiJ7UbTIup-M2XPURDT_INNE_pmiaSmw_BkDGUA_RG0SHZsW7qdZ8re0oYtYRA
http://contactpoov.googlegroups.com/web/Covey-Powerofthe7Habits4of4.zip?gda=5TpjfVAAAACc1dLKwGBFPNX5ijbLNhevifTbiKDvqSZdV9pyywrWqmG1qiJ7UbTIup-M2XPURDT_INNE_pmiaSmw_BkDGUA_I7czCEC-RyTBZz4u0nt7ww
- இதக் கேட்ட லீடராயிரலாம தல?
- ம்ம்ம்ம்
- நீ இத கேட்டு இருக்கியா தல?
- ம்ம்ம்... நல்லா இருக்கும்...
- அப்ப யேன் தல எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்து Team Lead-வெ இருக்க? சரி தல. அடுத்த வாரம் பாப்போம் தல. இனிமே தெரியும் நான் யாருன்னு அவங்களுக்கு.
அப்பா இன்னிக்கு புயல் ஓஞ்சுடுச்சு. நான் என் வேலய பாக்கலாம்.
No comments:
Post a Comment