நிகழும் கணங்களின்
அழுத்தம் தாளாது
காரணம் தேடினேன்....
கழித்த கனங்களின்
கடந்த சம்பவங்களில்.
யார் யாரோ வழினடத்த
அவர்தம் பாதத்தடத்தில் பயனமென்
நல் இலக்குக்காய்(?)
மூச்சு தினறலும், கசகசப்பும்
கூட்ட நெரிசலுடன் -- நெடியாய்
இலக்கு வந்தது எதிர்மறையாய்...
மனப்பாடமாக மறுத்த
மால்தூஸ் தியரி நிதர்ஷனமாய்
எனக்கெதிரே...
இப்போழுதெல்லாம்
பாதப் படிவுகளின் எதிர்துருவம்தான்
பலனென்று பலர் சொல்ல
திரும்பினேன்.
எனக்கு முன்னே
என்னிலடங்கா பாத அச்சுக்கள்
என் புதிய இலக்கு நோக்கி..
எனக்கு வழிகாட்டியாய்
No comments:
Post a Comment