Pages

Sep 16, 2007

--> Cheers

புதுசா டீம்ல சேர்ந்தவுடன் அறிமுகம் பன்னிக்கிரதுக்காக ஒரு பார்ட்டி கொடுத்தாருங்க நன்பர்.

பார்ட்டினு சொன்னவுடனேயே, நல்லதம்பி மதிய சாப்பாட Cut பன்னிட்டார். கொடும என்னன்னா, மொத Class ஊத்தம்போதே சொல்லிட்டார் எல்லாருக்கும் மொத Class மட்டும் அவர் செலவாம் - இங்க அப்படித்தானாம். என்ன அர்த்தம்...என்ன வேனும்னாலும், எம்புட்டு வேனும்னாலும் குடிங்க ஆன செலவு உங்கது. நல்லதம்பி மூஞ்சி போன போக்க பாக்கனுமே....

ஏண்ட்ட கை குழுக்கிட்டு, ஹிந்தில நமஷ்தே, எப்படி இருக்கீங்க? அப்படின்னு கேட்டாருங்க..பாவம் இதுக்காக யார்ட்டயோ போயி கேட்டு மனப்பாடம் பன்னிட்டு வந்து இருக்கார். எனக்குதான் ஹிந்தி தெரியாதே...

எனக்கு கன்ன கட்டி, உள்ளுக்குல்ல கல்லூரி நாட்கள்ள ஹிந்திக்காக போரட்டம் பன்னுனது, எழுத்துக்கள தார் பூசி அழிச்சது, நடு ரோட்டுல சம்பந்தமே இல்லாம ஜெயவர்தனே பரம்பரயவே அசிங்கமா கத்துனது எல்லம் ஓடுது.

மெதுவா சொன்னேன்... எனக்கு ஹிந்தி தெரியாது. ஐரொப்பால பல நாடுகள்ல ஒரே மொழி பேசுரவங்க இருக்காங்க ஆன இந்தியால பல மொழி பேசுரவுங்க ஒரே நாட்ல இருக்கோம்.

இந்தியால இருந்து இப்ப 5 பேர் வந்து இருக்கோம், எங்களுக்குல்லேயே நாங்க ஆங்கிலத்தில்தான் பேசிக்குவோம். என் தாய்மொழி தமிழ், அவர் மழையாலம், அவர் தெழுங்கு, அதோ அவர் பஞ்சாபி. -- அப்படின்னு சொல்லி முடிச்சேன். மனுசன் விடுவார்னு பார்த்தா திரும்ப...

"நாட்டுக்குன்னு ஒரு மொழி இருக்குமே அது என்ன?"
"அது ஹிந்திதாங்க.."
"அப்ப உங்க எல்லருக்குமே உங்க நாட்டு மொழி தெரியாதா?"
"அப்படி இல்ல, என்னத் தவிர மித்தவங்களுக்கு எல்லாம் ஹிந்தி தெரியும்"

ஹ்ம்ம்ம் ...இப்ப என் மூஞ்சி போன போக்க பாக்கனுமே. அதுக்கு என்னங்க பன்ன முடியும்? இதுக்காக ஹிந்தி இனிமே கத்துக்க முடியுமா என்ன? புலி பசித்தாலும் புல்ல தின்னுமா?

சரின்னு பேச்ச மாத்த class-ல ஊத்தரத பாத்தேன். எல்லா பேரும் அவங்க அவங்க class எடுதுக்கிட்டு, "Cheers! Cheers! Cheers!" சொன்னோம். அப்பரம், Prost! Prost! Prost!-னு சொன்னாங்க...அது ஒன்னும் இல்ல ஜெர்மன்ல Cheers சொல்ராங்க.

அதோட விடல... மனுசன் எல்ல பேர்ட்டயும் இன்னிக்கு நம 6 மொழில சீர்ச் சொல்லர நல்ல பார்ட்டி.. அப்படின்னுட்டு என்ன சொல்ல சொல்றாரு.

தமிழ்ல Cheers-க்கு என்னங்க? நான் என்னத்த சொல்ரது? சத்தியமா எனக்கு தெரியலங்க... நாமதான் புலியாச்சே...

தமிழ் பழைய மொழி. எங்கள்ட்ட இப்படி தன்னி அடிக்கிர பழக்கம் இல்ல அதனால அப்படி ஒரு வார்தை இருக்க வேண்டிய அவசியம் இல்ல அப்படின்னேன். அவங்களுக்கு ஒரெ ஆச்சரியம்.

சரி உங்க மொழியில் இல்ல...அப்படின்னுட்டு அடுத்த நன்பர்கள சொல்ல சொன்னாங்க ... அவுங்களுக்கும் தெரியல...இல்லென்னு சொல்லி சமாளிச்சாச்சு.

அப்ப ஒரு தடிப்பய சனியனா கேட்டான்...
"நான் காம சூத்ரா படிச்சு இருக்கேன். அதுல இந்த மதிரி Alcohol இந்திய மக்கள் குடிக்கிறதா இருந்துச்சே?"

இதுக்கு என்ன பதில் சொல்ரதுன்னு தெரியாம முழிச்சப்ப அவுங்களே சரி விடுங்கன்னு Topic மாத்திட்டாங்க... அப்பா தலை தப்பியது தம்பிரான் புன்னியம்னு பெரு மூச்சு விட்டேன்.

தன்னிக்கு அப்பரம் எல்லாரும் சாப்ட போனோம். ஆரம்பிச்சுட்டங்கயா இங்கயும்.
"Guten Appetite! Guten Appetite! Guten Appetite!"-னு சொன்னங்க - இதுக்கு என்ன அர்த்தம்னா ... நல்ல சாப்பாடாக இருக்க வாழ்த்துரது.

என்னய தமிழ்ல சொல்ல சொன்னாங்க...இதுக்கு என்னங்க நான் சொல்ரது? எங்க அப்பா எப்பவும் சப்டரதுக்கு முன்னாடி சாப்பாட்ட கைல எடுத்து, கன்ன மூடி வாய்க்கும் மேல கைய உயர்த்தி காமிச்சுட்டு அப்பரம் சாப்டுவாரு. சின்ன புள்ளையா இருக்கும்போது கேட்டதுக்கு, "இன்னிக்கு பசிக்கு சாப்பாடு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்ரது" அப்படின்னாரு.

புலியாச்சே... இத எடுத்து விட்டேன். அந்த தடிப்பய உங்களுக்கு கிடைச்சதுக்கு நீங்க நன்றி சொல்ரது சரி, நீங்க அடுத்தவங்கள வாழ்த்த மாட்டீங்களா?"

நீங்களே சொல்லுங்க புலி எத்தன தடவதான் மன்ன கவ்வுரது?


சரி இப்ப விசயதுக்கு வரேன் - கீழே உள்ள வார்தைகளுக்கு தமிழில் என்ன?

1) Cheers
2) காலை வணக்கம் (மாலை வணக்கம், etc) - அப்பட்டமான Good Morning- தமிழாக்கம். நமக்குன்னு வார்த்தை வாழ்த்துரதுக்குன்னு இருக்கா?

சந்தேகம்: அரசவையில் மன்னர் வரும்பொது வாழ்த்து சொல்லி பராக் பராக் சொல்ரத படங்கள்ல பாத்து இருக்கோம். தமிழில் மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்கள் சொல்லும் வழக்கம் இருந்ததா?

தெரிஞ்சா சொல்லுங்க...

4 comments:

  1. பூவேந்திரன் ,

    தமிழ் என்பது தமிழர்கள் வாழ்ந்து பார்த்து உருவாக்கிய மொழி, மிகவும் தொண்மையானது எனவே அதில் அவர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்தார்களோ அதற்கு தேவையானவற்றை மட்டும் சொற்களாகக்கொண்டு உருவாக்கிக்கொண்டார்கள்.

    உதாரணமாக மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சமூக பழக்கமாக நம் நாட்டில் வைத்துக்கொள்ளவில்லை, அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் எழுதும் போதே கள்ளுண்ணாமை என்று குறிப்பிட்டு அதிகாரம் எழுதி இருப்பார். ஆனால் மேலை நாடுகளில் இப்படி மது அருந்துவதை எதிர்த்து கருத்துள்ள இலக்கிய நிகழ்வுகள் கூட இருக்காது.

    நம் நாட்டில் யாரும் வீட்டில் அப்பா ,அம்மா, சகோதர சகோதரிகள் புடை சூழ மது அருந்துவதில்லை எனவே சியர்ஸ் என்று சொல்லிக்கொள்ள வார்த்தைகள் கண்டு பிடிக்கவில்லை.

    தமிழ் நாட்டில் உணவருந்தும் போது கடவுளுக்கு நன்றி சொல்லும் பழக்கம் மட்டும் உண்டு. இப்படி அதற்கும் வாழ்த்தும் பழக்கம் இல்லை.

    மேலை நாடுகளில் அக்காலத்தில் மாமிசம் என்பது வேட்டை ஆடி பெறப்பட்டது தான் அது நல்ல இறைச்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் நல்ல உணவாக இருக்கட்டும் என்று வாழ்த்திக்கொள்கிறார்கள். நாம் பெரும்பாலும் விவசாய உணவுப்பொருள் தானே , வருண பகவான் கருணையால் விளைந்தது என்று நன்றி கூறுகிறோம்.

    சமச்கிருதத்தில் அன்ன பூரணி தோத்திரம் என்று கூட இருக்கிறது , அதனை சொல்லி சாப்பிடுவார்கள்.

    தமிழில் நன்றி சொல்வதோடு சரி.

    எனவே இதற்கெல்லாம் எதுவும் இல்லையா என்று மண்ணைக்கவ்வ வேண்டாம்.

    நமக்கு எப்போதும் வணக்கம் தான் , மகிழ்ச்சி தான் . தனியே காலை ,மாலை எல்லாம் சொல்ல தேவை இல்லை. சியர்ஸ் என்றால் மகிழ்ச்சி என்று தானே அர்த்தம்!

    ReplyDelete
  2. வவ்வால்,

    //மேலை நாடுகளில் அக்காலத்தில் மாமிசம் என்பது வேட்டை ஆடி பெறப்பட்டது தான் அது நல்ல இறைச்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் நல்ல உணவாக இருக்கட்டும் என்று வாழ்த்திக்கொள்கிறார்கள்.//

    நல்ல விளக்கம் - சரின்னுதான் தோனுது. Thanks.

    //சமச்கிருதத்தில் அன்ன பூரணி தோத்திரம் // - கடவுளை தொழுதலும் மன்னனை புகல்தலும்தன் நமது வழக்கம? சக மனிதனுக்கு?



    //மிகவும் தொண்மையானது எனவே அதில் அவர்கள் எப்படி ஆதிகாலத்தில் வாழ்ந்தார்களோ அதற்கு தேவையானவற்றை மட்டும் சொற்களாகக்கொண்டு உருவாக்கிக்கொண்டார்கள்.//

    நாளாக நாளாக புது புது சொர்க்கள் உருவாவதுதான இயல்பு? அப்படிதான் நடந்தது.

    ஆனால், அடிமைகளாக இருந்தபோது தமிழ் ஊனப்பட்டதை விட சுதந்திரமானபிரகுதான் தமிழ் ஊனப்பட்டது அதிகம்னு தொனுது.

    ReplyDelete
  3. பூ, என்ன தமிழ் எழுதறதுல இத்தன தப்பு பண்றீங்க? உங்க எழுத்துல ரொம்ப‌ சொற்பிழை இருக்கு. உதாரணம்: தண்ணிர தன்னிர்‍னு எழுதி இருக்கீங்க. இது மாதிரி இன்னும் எவ்வளவோ இருக்கு......

    ReplyDelete
  4. ஹி ஹி... ஆனந்தி...இந்த பிழைகளை நானும் பார்த்தேன். நான் மொத மொத Typist-ஆ வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்ல Typist-ல இருந்து தப்பிஷ்ட்-னு பட்டம் வாங்கிட்டேன்ன பாத்துக்கங்களேன். இது தொட்டில் பழக்கம். திருத்திக்க முயற்சி பன்னிக்கிட்டே இருக்கேன்...

    ReplyDelete