Pages

Feb 14, 2017

Food

[8:47 PM, 2/14/2017] Nattu Marunthu: உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி! நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: - 1. #கேப்பைக்களி : - ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில் ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம். கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். பலன்கள் : - கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது. கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம் வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும். 2. #உளுத்தங்களி : - தேவையானவை :- நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு - ஆறு கைப்பிடி கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு தேங்காய் துருவியது நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன் அரிசிமாவு - சிறிதளவு ஏலக்காய் - நான்கு கிராம் வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு செய்முறை : - ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும். பலன்கள் :- உளுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச் செய்து சாப்பிடுவது பலன் அளிக்கும். 3. #வெந்தயக்களி :- தேவையானவை: புழுங்கல் அரிசி - 300 கிராம் உளுந்தம் பருப்பு - 50 கிராம் வெந்தயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை - 300 கிராம் செய்முறை :- புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம். பலன்கள் :- கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும். ஆகவே, களி சாப்பிட்டால், நலம் பெருகும். [8:48 PM, 2/14/2017] Nattu Marunthu: மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும். மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும். மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம். கைவைத்தியம்: 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். 6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment