24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇👇
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...
முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....
தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...
அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.
ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.
ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.
நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.
மனம் சற்று நிம்மதி அடைந்தது.
அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..
அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.
சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...
இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...
அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??
காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.
உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.
சம்பவம்-5 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம்-6 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
No comments:
Post a Comment