எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து விளக்கம் இங்கே...
Dec 25, 2017
Dec 21, 2017
முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல்
எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து விளக்கம் இங்கே...
Feb 14, 2017
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அல்சர் :- முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும். புற்றுநோய் :- முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும். கண்புரை :- கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவரை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம். சரும பிரச்சனைகள் :- முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும் :- முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளைக்கு நல்லது :- முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும். உடல் எடை குறையும் :- உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு. கொலஸ்ட்ரால் குறையும் :- முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது. கல்லீரல் சுத்தமாகும் :- முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும். இரத்த சோகை :- முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும். ஜூஸ் செய்யும் முறை * பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். கீழே சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பு 1 :- முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும். குறிப்பு 2 :- முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். குறிப்பு 3 :- ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பு 4 :- இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்.
Health - Info
நாட்டு மருந்து வாட் சப்குழு 9787472712 ஒருவர் நஞ்சை (தவரான உணவை) உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விட்டான் இல்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது? இதே போல் சத்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள வெளியேற்றவே. இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்! மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! மருத்துவம் தவிறுங்கள்! ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!
Headache Medicine
தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள் :- தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :- 1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும். 2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும். 3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். 4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும். 5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும். 7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்., 8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும். 9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும். 10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும். 11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும். 12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும். 13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும். 14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும். 15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும். 16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும். 17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும். 18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும். 19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும். 20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும். 21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் . 22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும். 23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும். 24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க தலைவலி குணமாகும். 25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும். 26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும். 27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் . 28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.
Food
[8:47 PM, 2/14/2017] Nattu Marunthu: உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி! நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: - 1. #கேப்பைக்களி : - ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில் ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம். கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். பலன்கள் : - கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது. கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம் வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும். 2. #உளுத்தங்களி : - தேவையானவை :- நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு - ஆறு கைப்பிடி கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு தேங்காய் துருவியது நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன் அரிசிமாவு - சிறிதளவு ஏலக்காய் - நான்கு கிராம் வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு செய்முறை : - ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர் உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும். பலன்கள் :- உளுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச் செய்து சாப்பிடுவது பலன் அளிக்கும். 3. #வெந்தயக்களி :- தேவையானவை: புழுங்கல் அரிசி - 300 கிராம் உளுந்தம் பருப்பு - 50 கிராம் வெந்தயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை - 300 கிராம் செய்முறை :- புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும். தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம். பலன்கள் :- கிராமத்தில் வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும். ஆகவே, களி சாப்பிட்டால், நலம் பெருகும். [8:48 PM, 2/14/2017] Nattu Marunthu: மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும். மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும். மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம். கைவைத்தியம்: 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். 6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
Medicine
நாட்டுமருந்து வாட்சப்குழு 9787472712 கண் எரிச்சல் குறைய நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும். அறிகுறிகள்: கண் எரிச்சல். கண்ணில் நீர்வடிதல். தேவையான பொருட்கள் : நாவல் பழம். செய்முறை: நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஏற்படும் எரிச்சல் நீர்வடிதல் ஆகிய நோய்கள் குறையும். அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும். 2 அறிகுறிகள்: கண் எரிச்சல். தேவையான பொருட்கள்: அதிமதுரம். கடுக்காய் திப்பிலி. மிளகு. தேன். செய்முறை: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும். பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும். 3 அறிகுறிகள்: கண்ணெரிச்சல். தேவையான பொருள்கள்: பொன்னாங்கண்ணி. மிளகு. பால். செய்முறை: 50 கிராம் பொன்னாங்கண்ணி இலைகளை எடுத்து இதனுடன் 4 கிராம் மிளகு சேர்த்து சிறிது பால் விட்டு மைபோல நன்றாக அரைத்து சிறிது எடுத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும். குறிப்பு: இந்த மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 7 முறைகள் தேய்த்து குளித்து வந்தால் கண்ணெரிச்சல் குறையும். வெயில் காலங்களில் அதிக சூட்டினால் ஏற்படும் எரிச்சல் குறையும். மேலும் இந்த மருந்தை பனி மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த கூடாது. நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல் குறையும். 4 அறிகுறிகள் கண்ணில் நீர் வடிதல். கண் எரிச்சல். தேவையான பொருட்கள் நெருஞ்சில் செடி. செய்முறை நெருஞ்சில் செடியைப் பிடுங்கி பொடியாக நறுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வர கண் எரிச்சல் குறையும். கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும். அறிகுறிகள்: கண் எரிச்சல். தேவையானப் பொருட்கள்: கொடிப்பசலைக் கீரை. செய்முறை: கொடிப்பசலைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குறையும்.
Food - Info.
நாட்டு மருந்து வாட்சப்குழு 9787472712 👉🏼 வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்? தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம். 🌞💧 1. இளஞ்சூடான நீர் 🍸 இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். 🍶 2. வெந்தயம் நீர் 🍜 வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். 🍹🐝 3. தேன் தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும். 🍅🍆🌶 4. காய்கறிகள் காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும். 🍊🍎 5.பழங்கள்🍌🍋 பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது. 🍚 6. அரிசிக்கஞ்சி அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. 7.உளுந்தங்களி உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும். 🍵 8.முளைக்கட்டிய பயறு முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
Feb 6, 2017
குட்டி உன்மை சம்பவங்கள்
சம்பவம்-1 👇👇👇👇👇👇
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇👇
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...
முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....
தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...
அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.
ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.
ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.
நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.
மனம் சற்று நிம்மதி அடைந்தது.
அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..
அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.
சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...
இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...
அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??
காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.
உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.
சம்பவம்-5 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம்-6 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம்இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.
'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
சம்பவம்-3 👇👇👇👇👇👇👇
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர்...
முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை...
'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,...
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..
ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார்....
தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு...
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார்...
அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக் கொண்டிருந்தார்.
ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.
ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன்.
நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள்.
மனம் சற்று நிம்மதி அடைந்தது.
அவர்கள் பற்றி எதையேனும்
தெரிந்து கொள்ளலாம் என்று மனது
விரும்பியது..
அவர்களை பின்தொடர்ந்தேன்..
தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும்.
சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்...
அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழே கிடத்தி , தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி அழுதார்...
எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ...
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கை கூட
திருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில்...
இறந்து போன தன் மகனை பாடை
கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று.
உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்தஅந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது....
உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..
சம்பவம்-4 👇👇👇👇👇👇👇👇
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்....
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமிசிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது...
அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார்....
கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ??
காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள்.
காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்...
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ???
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்து றாதீங்க அய்யா..
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது...
இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா.
உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்...
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறுபெண்...
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார்.
என்னஅய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்தசிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்என்னை சுட்டு விட்டது என்றார்."
தயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடுநிறுத்துங்கள்.
சம்பவம்-5 👇👇👇👇👇👇
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.
மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது.
மூன்று ரூபாய் தான்
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?
என்று கேட்கஅதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......
சம்பவம்-6 👇👇👇👇👇👇👇
மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...
திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.
கணவர் வேகமாக ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.
அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...
இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.
கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளுக்கு அழுகையாய் வந்தது.
இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.
மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...
கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...
ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.
தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.
இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன்.
அதான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
Jan 10, 2017
Jan 3, 2017
Fwd: oviya photo
---------- Forwarded message ----------
From: Renuka Devi <pprenuka@gmail.com>
Date: Wed, Jan 4, 2017 at 11:58 AM
Subject: oviya photo
To: Renuka Devi <pprenuka@gmail.com>
From: Renuka Devi <pprenuka@gmail.com>
Date: Wed, Jan 4, 2017 at 11:58 AM
Subject: oviya photo
To: Renuka Devi <pprenuka@gmail.com>
Subscribe to:
Posts (Atom)