Pages

Feb 13, 2015

கங்காணி உத்தியோகம் ...


கங்காணி உத்தியோகம்
சிலருக்கு வேலை கொடுத்து வாங்கவேண்டும்...
பக்கத்தில் ..
படித்தது BE ..
சாதுவாய் ஒரு பையன் ...சுறுசுறுப்பாய்
பார்ப்பது  என்னவோ
கணினியில் வெட்டுதலும் ஒட்டுதலும் ...

பலநாளாய் பார்த்து பார்த்து
பொறுமையின்றி கேட்டேன்
"என்ன பொழப்பு இது?..." பிடித்தா இதை செய்கிறாய்?
பதிலைப் போட்டான் கவிதையாய்...

------------------------------------

முளைக்கதே கொழுந்தே முளைக்காதே..
முளைத்து கண்ணுக்கு அழகாய்
இலை விடும்போது ..
வெட்டி விடுவார்கள் .
முளைக்காதே -
போன்சாய் மரத்தை சுமக்கும் தொட்டி பதைபதைத்தது ...

தெரியும்!
முளைக்க முளைக்க வெட்டுவார்கள் எனத்
தெரியும் ...
வெட்டுவதை நினைத்து
முளைக்க மறந்தால்.. மறுத்தால்

வெட்டி விடுவார்கள்
வெட்டி என நினைத்து
வேருடன் சேர்த்து வெட்டி விடுவார்கள்
உன்னையும் சேர்த்து ...

நான் முளைப்பது
எனக்காக மட்டும் இல்லை...
தொட்டியே உனக்காக்கவும்தான்.

நீ என்ன பைத்தியமா?
நீ வளரவில்லை எனில் உன்னைத்தான் தூக்கி எறிவார்கள்
என்னை அல்ல ...இது தொட்டி.

உன்  பேச்சைக் கேட்டு நானும்
எனக்கடுத்து இரண்டு செடிகளும்
வளரவில்லை எனில் ?
முளைப்பது உனக்காக்கவும்தான் என்பதைவிட
"உனக்காகவே".

Feb 7, 2015

KFC - ஆர்யாவிற்கு மின்ன ஞ்சல்

திரு ஆர்யா அவர்களுக்கு, (arya.official@gmail.com)
உங்களின் நடிப்பாற்றலும், தேர்வுசெய்து நடிக்கும் படங்களாலும், உங்கள் நடிப்பு ரசிக்கும்படியாகவும் நன்றாகவும் இருக்கிறது.

மதராசபட்டினம் பார்த்து, திரும்பி திரும்பி பார்த்து ரசித்த நான் எதைச்சையாக உங்கள் KFC விளம்பரம் பார்த்தேன்.   உங்கள் இளம் வயதில் வேண்டிய பணம்,மதிப்பு, புகழ் சம்பாதித்து உள்ளீர்கள்  -  அது நன்மைதிப்பாக மாற இந்தமாதிரி தரமற்ற,   விளம்பரங்களுக்கு துனைபோகதீர்கள்.

நன்றி.

பூவேந்திரன்