Pages

Apr 13, 2014

இவ்வளவு யோசனை தேவையா?

 

என் பையன் இன்னிக்கு தொலைபேசியில்,  எனக்கு i-pad வேணும்.. ஏன்னா எங்க ஸ்கூலில் எல்லா பசங்களும் I-Pad, I-Phone வச்சு இருக்காங்கங்க, அது வச்சு இருக்காங்க, இது வச்சு இருக்காங்க,  … என்ட்டதான் ஒண்ணுமே இல்ல … அப்படின்னான்.

 

சரிடா - நீ hostel-ல் இருக்கியே, எப்படிடா hostel-ல் இருக்கும் எல்லா பசங்களும் வச்சு இருக்காங்களா என்ன? அப்படின்னு கேட்டப்ப …

hostel-க்கு யாரும் எடுத்துட்டு வரத்து இல்ல - ஆனா எல்லாப்பெரு வீட்டுலயும் இருக்கு …

சரிடா உன் வீட்டுலயும் இருக்கேடா?

இருக்கு - இருந்தாலும் எனக்கு தெரியாதுல்ல இருக்க இல்லியான்னு … நீங்க எத கேட்டாலும் எதுக்கு, எப்ப, எங்கானு கேக்குறீங்க … இப்ப எதுவும் உங்கட்ட இல்லீல ..

சரிடா வேணும்னு  தோணுரப்ப வாங்கிக்கலாம்டா … அப்படின்னு சொல்லி சமாதானப்  படுத்தி  தொலைபேசிய வச்சுட்டேன்… ஆனா வச்ச பின்னாடி எனக்கு நினைவு அப்படியே மலரும்நினைவு மாதிரி போகுது..

அவனாவது சின்னப்பயல்… நான் வந்து … இன்னம் எனக்கு ஞாபகம் இருக்கு … ஒரு Visitting Card எனக்கு கொடுக்குரதுக்காக, Visitting Card தரக்கூடிய வேலைல இருக்கிறதுக்காக எவ்வளவோ கனவுகள்..  அங்க வேல பாக்கிறேன்… இங்க வேல பாக்கிறேன்… இதுதான் என் Business Card அப்படின்னு சொல்லி அவங்க அவங்க கொடுக்கும் போது என்கிட்டே ஒன்னும் இருக்காது..

நல்லா ஞாபகம் இருக்கு … மொத மொத Business Card கம்பெனியில் கொடுத்தப்ப, பேரப்போட்டு, Sr Software Engineer அப்படின்னு அழகா ஒரு நூறு card அடிச்சு கொடுத்தாங்க .. ரெண்டு நாளா தூக்கம் இல்ல … வாங்கிட்டு வந்து அப்படியே ஒரு கார்ட என் பர்ஸ்ல, இன்னொரு கார்ட மனைவிக்கு யாம் பெற்ற இன்பம் பெருக அப்படின்னு கொடுத்துட்டு, இன்னொரு கார்ட அலுவலகம் போற பையில் அழகா வெளில தெரியறமாதிரி வச்சுட்டு மிச்சம் 97 கார்ட அப்படியே இருந்துச்சு … அப்படியே இருக்கு அப்படின்னு எப்ப தெரிஞ்சுச்சுன்னா… அந்த கம்பெனிய விட்டு வெளில வரப்ப டேபில சுத்தம் பண்றப்ப பாத்தா அந்த 97 கார்ட அப்படியே இருந்துச்சு… மூணு வருசத்துல நான் மூணு கார்ட தான் உபயோகபடுத்தி இருக்கேன்.. அதுவும் எனக்கேதான்.  யாருக்குமே கொடுக்காத அந்த கார்டுக்காக எத்தனை நாள் கனவு கண்டு இருக்கிறேன்… சே… இவ்வளவு நாள் வேலை பார்க்குறோம் ஒரு visitin card - இல்லையேன்னு எத்தனை காயம்…நானே காயப்படுக்கிட்டது அதிகம்…

 

அதேமாதிரி.. e-mail id.  பொதுவான hotmail, yahoo id தான் அன்னிக்கு எல்லாப்பேரும் வச்சு இருந்தோம்..கம்பெனி பேர்ல ஒரு id இருந்தா அது ஒரு பிஸ்தா மாதிரி நினைப்பு… மொத மொத ஜெயமாருதி – ல id கொடுத்தப்ப தலை கால் புரியல… நானே அதுல இருந்து hotmail -க்கு ஒரு test மெயில், யாஹூக்கு ஒரு test மெயில். hotmail, yahoo id -ல இருந்து பதில்…இப்படி test1, test2, test3..ன்னு போச்சு… அப்பறம் hotmail, yahoo-ல இருக்குற எல்லா idயையும் எடுத்து எல்லாத்துக்கும் கம்பனி id-ல இருந்து “இதுதான் எனது புதிய  id”… அப்ப்டின்னு பறந்துச்சு… ஒரே புளங்காகிதம்தான் போங்க…. இந்த பெருமை ஒரு இரண்டு மாசம் தாங்குச்சு…அப்பறம் அது வழக்கத்துல ஒன்னாகி அப்படியே போயிருச்சு….

 

அப்பறம் கடன் அட்டை… அதாங்க Credit Card… அப்பத்தான் Credit Card வந்த புதுசு… சென்னையில் … லிமிட் ரொம்பல்லாம் இல்ல ஐந்தாயிரம் ரூபாய்.. அதுக்கு என்கூட வேலை பார்த்த வங்கியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றவர் சிபாரிசுல, எல்லா காகிதத்துலையும் படிக்காம கையெழுத்து போட்டு … இந்த ஐயாயிரம் ரூபாய்க்கு எனக்கு என்ன எல்லாம் தகுதி இருக்குன்னு பாத்து.. திடீர்னு அம்பது ஆயிரம் ரூபாய் கட்டக்கூடிய தகுதிய நிரூபித்து.. அந்த கார்ட வாங்கினேன்.  அத வாங்கி பணப்பையில் வச்சுக்கிட்டு.. வாங்குற இடங்கள்ள கடன் அட்டை வாங்குவீங்கலா… அப்படின்னு மொக்க கடையில கூட கேட்டு…அப்பறம் பாத்தா… ரோட்டுல நடக்க முடியாம கடன் அட்டை வாங்க சொல்லி அலையுற ஆட்கள்ட்ட இருந்து தப்பிச்சா போதும்னு ஆகுற நெலம… வந்த போன்ல என்பது சதவீதம் கடன் அட்டை வாங்க சொல்லித்தான்…

திரும்பி என் பையன நினச்சேன்.. எனக்கு iPad, Iphone, tablet, அது வேணும், இது  வேணும்னு இந்த நீர்க்குமிழி மாதிரி போயிரக்கூடிய இந்த Electronics & Gadgets ட ரொம்ப முக்கியமா நினைச்சுக்கிட்டு … இப்ப ஒன்னும் சொல்ல முடியாது…

No comments:

Post a Comment