Pages

May 7, 2013

எடுக்கத் தவறிய புகைப்படங்கள்!

Facebook-ல்
கொத்து கொத்தாய் 
நண்பரின் புகைப்படங்களை பார்த்தபின் தெரிந்தது
என்னால் எடுக்கப்படாத புகைப்படங்கள்...
இனி என்னால் எடுக்கவே முடியாத
புகைப்படங்கள் எத்தனை எத்தனை...

நல்ல தண்ணீர் வெள்ளம் ஓடிய வைகை ...
தண்ணீர் தளும்பிய கண்மாய் ..
இருபுறமும் மரங்களடர்ந்த வாய்க்கால்...
மணியோசையும் வண்டியோட்டியின் பாட்டுமாய் போன மாட்டு வண்டி..


முக்கியமாய்

நானும் என் தந்தையும் சேர்ந்து எடுக்காத புகைப்படம்.

No comments:

Post a Comment