Pages

Apr 14, 2012

குண்டுச்சட்டிக்குள் குதிரை


பனிநிமித்தமாய்
பலநாடுகள் பயணம்
சிலநாடுகள் வருடக்கணக்கில்
பலநாடுகள் மாதக்கணக்கில் …

தொலைகாட்சியில் அந்த நாடுகளைப்
பார்க்கும்போது புதிதாய், பரவசமாய்
காட்சிகள் கண்ணைப்பறிக்கும் …

யோசிக்கும்போது எங்கும், எங்கெங்கும்
பார்த்தது என்னமோ
14" Monitor - தான்

---------------------------------------------------

வேலை நாளின்
ஐந்து வருட பழக்கமாய்
கோபுரம் நோக்கி கும்பிடு...
பத்து வருட கனவு
பழனி ஆண்டவரை குடும்பத்துடன்  தரிசிக்க..
இந்த வருடமும் தள்ளிப் போனது
வாகன ஒட்டி வடிவேலுக்கு...

No comments:

Post a Comment