Pages

May 13, 2011

வாக்களித்த உங்களுக்கு நன்றி

அடுத்தவர் தோழ்வியில்
மகிழ்வது நல்லதல்ல ... தெரிந்தும்
மகிழ்ச்சியாக இருக்கிறது...

வயிறு எறிந்த விஷயங்கள்
ஒன்றா இரண்டா
அங்கே உயிர் போகும் சமயங்களில்
கடிதம் போட்டார்
தந்தி அடித்தார்
பதவிக்காக மட்டும்
பதறி அடித்து டெல்லி போனார்

அம்மையார்களின் நகை அணிந்த
புகைப்படத்தை காட்டியே
ஊழல் ஊழல் என சொல்லி வந்தவர்கள்

கோடிகளில் புரண்டனர்
மிச்சம் மீதியை
நாகரிக பிச்சையாய்
தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர் என ...

மறக்காத,
இலவச பிச்சையை
மறுத்த உங்களுக்கு, மக்களுக்கு நன்றி

சீமான் சொன்னதுபோல
காங்கிரசை வீழ செய்ததுக்கு நன்றி

கூஜா தூக்காமல்
நமக்கு தெரியா ஆயிரம் அச்சுறுத்தல்களுக்கு
இடையேயும்,
தங்கள் பணியை செவ்வனே செய்த
அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி!! நன்றி!!

இந்த மகிழ்ச்சி
தமிழனுக்கு படகாயிருந்து
நடுக்கடலில் தவிக்கவிட்டவர்களும்
அதற்கு துணை போனவர்களும்
காணமல் போனதற்கு

வென்று வந்தவர்கள்
குறைந்தபச்சம் "ஏன்டா இவர்களுக்கு வாக்களித்தோம்?"
என என்னாதவாறு நடக்க வேண்டும்

பூவேந்திரன்

1 comment:

  1. The presentation exposes your inner being. It is good and appreciable.

    Thank you,

    C.Sunder Singh

    ReplyDelete