Jun 23, 2010
Rochester-ல நிலநடுக்கமா? "23 Jun 2010"
"இன்று உங்கள் எதிரிகள் ஆடிப்போயிவிடுவார்கள் - உங்களின் பலம் அதிகமாகும். அலுவலகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்". இன்னைக்கு காலையில் மின்னஞ்சலில் வந்த அன்றைய ஜோதிடம் படிக்க நன்றாக இருந்தது.
இதுல எனக்கு ஒரு விசயம் புரியல - இந்த ஊருக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது - அதுக்குள்ள யார் எதிரி இருக்கப் போராங்கன்னு...
அலுவலகத்தில் வழக்கம்போல 'Meeting, Meeting' -னு இருந்தது... ஒரு 'Meeting'-ல கேட்டுகிட்டு இருக்கும்போதே,...(எந்த மீட்டிங்க்ல நம பேசி இருக்கோம்)... நைசா பெஞ்சு ஆடுச்சு என்னன்னு பாத்தா அட ... நிலம் நடுங்குதுங்க...நான் ஆடிப்போயிட்டேன் சாமி.
ஜன்னலுக்கு பக்கத்துல, 13-வது மாடில இருந்து பாக்கும்போது ஆடுறதா... நாடி நரம்பெல்லம் நடுங்க ஆடிப்போயிட்டேன்...
எதிரிகள் ஆடிப்போயிருவாங்கன்னு ஜோஷ்யம் சொல்லுச்சு - ஆனா எனக்கு எதிர்ல யாரும் இல்லாம நாந்தான் ஆடிப்போயிட்டேன்.
சரி அது எப்படியோ ஒரு மாதிரி recover ஆசுன்னு வச்சுக்கங்க... அப்பரம்தான் விவாதம் ஆரம்பிசது - Richter scale 4.8 இல்ல.. 8.4 - அளவு என்னனு....
உங்களுக்கு இந்த மதிரி Earthquake பத்தி தெரிஞ்சுக்கனும்னா.....http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/ இந்த இனயதளத்த பாருங்க...
No comments:
Post a Comment