Pages

May 22, 2022

தமிழ் நண்டுகள்!

எங்கள் முதலாளி 

மிகவும் நல்லவர்.


பேதமின்றி 

எல்லோரையும் ஒரே பாத்திரத்தில்தான் 

வைத்திருக்கிறார்..


பாத்திரத்தை மூடவும் இல்லை !

பார்த்துக்கொள்ள ஆளும் இல்லை!

இருந்தும் ...

இங்கேயேதான் இருக்கிறோம் 


ஒவ்வொருவரும் அடுத்தவர்பால் 

வெறுப்பை வளர்த்து 

வெளியே செல்வோர் 

காலைப்பிடித்திழுத்து 

பாத்திரத்தில் 

பாத்திரமாகவே இருக்கிறோம் !

May 18, 2022

ஊனம்

பறவையின் பார்வையில் 
இறக்கையில்லாததால் 
ஊனம் நான் !

பறவையின் பார்வை 
எனக்குத் தெரியாததால் 
என் ஊனம் 
எனக்கு இழப்பில்லை !!

பார்த்தும் பார்க்காமல் 
யாரிடமும் சொல்லாமல் 
பறவை போயிருந்தால் 
பிரச்சனை யாருக்குமில்லை !!!