எங்கள் முதலாளி
மிகவும் நல்லவர்.
பேதமின்றி
எல்லோரையும் ஒரே பாத்திரத்தில்தான்
வைத்திருக்கிறார்..
பாத்திரத்தை மூடவும் இல்லை !
பார்த்துக்கொள்ள ஆளும் இல்லை!
இருந்தும் ...
இங்கேயேதான் இருக்கிறோம்
ஒவ்வொருவரும் அடுத்தவர்பால்
வெறுப்பை வளர்த்து
வெளியே செல்வோர்
காலைப்பிடித்திழுத்து
பாத்திரத்தில்
பாத்திரமாகவே இருக்கிறோம் !