உயிர் வாழ வெளிச்சம் கொடுத்த
சூரியனுக்கு நன்றி சொல்லி,
உடனுழைத்த மாடுகளுக்கு
நன்றி சொல்லி,
நாயின் துணையுடன் காவல்காத்த
ஊர்சாமிக்கு ஊரே கூடி பொங்கல் வைத்து
ஊர் சனமனைத்தும்
ஒன்னுக்கொன்னாய் சாமிகும்பிட்டோம்...
நானும் அதில் இருந்திருக்கிறேன்... அன்று...
கடந்த வருடம் ...
சென்னையில் பக்கத்து வீட்டில் மரணம்...
போகலாமா? கூடாதா? வேண்டாமா? சரியா ?
குழப்பத்தின் பல மணிநேர குடைச்சலுக்குப் பின் போனேன்..
இருந்தவர்கள் அனைவரும் அந்நியமாய் பார்க்க
இடமகன்றேன்..
உண்மையில்
மறுநாள் முதல் பக்கத்துவீட்டு காரர்கள்
பழக்கமானார்கள்
பாவம் அவர்களுக்கும் புதுசு போல
என்னைப்போலவே தயக்கம் ....
எங்கும் நீர் குடிப்பதற்குத்தான் ஒரு குவளை இல்லை என்று
தோணியில் இருப்பவன் சொல்வது போல ...
எங்கும் மனிதர்கள்...
எதற்கும் உடன்படாமல்...
ஒன்றுபடுவோம் ... முடிந்தவரை
உதவிகள் செய்வோம்
பொங்கல் வாழ்த்துக்கள்
பூவேந்திரன்
«.............. Poovendran.................»
«·´`·.(¸.·´(¸.·* *·.¸)`·.¸).·´`·»