Pages

Oct 10, 2018

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 
  மூட்டுக்கு முடக்கறுத்தான் 
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  
   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Take care of your Body!



Apr 24, 2018

தமிழில் சிறந்த எழுத்தாளர்கள்

புதுமைபித்தன்
அசோகமித்திரன் 
சுந்தர ராமசாமி
ஜெயகாந்தன்
சுஜாதா 


Apr 13, 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புள்ள அனைவருக்கும் 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழையடி வாழையாய் 
வந்த அரசியல்வாதிகள் அனைவரும் 
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபமென 
ஆண்டதன் விளைவு...
இன்று ....
எரிகிற தீயாய் தமிழ்நாடு 

தமிழகத்தில் 
கனவு பருவமாம் வாலிப பருவத்தில் 
காற்றுக்கும் தண்ணீருக்குமாய் 
போராட்டம் ....

நாட்டு நடப்புகள் எதுவும் 
நன்றாக இல்லை ...
நாட்டுக்கும் நமக்கும் நல்லது செய்ய 
தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களெல்லாம் 
பகடைக்காயாய் 
ஒன்று காசுக்காக ஓடுகிறார்கள்  அல்லது 
ஏற்கனவே எடுத்த காசினால் வரும் கேசுக்காக 
அடுத்த கட்சி பின்னால் ஓடுகிறார்கள் ...

இருந்தும் ...
நாளை நன்றாக விடியும் என்ற 
நம்பிக்கையில் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அன்புடன் 
பூவேந்திரன் 
 



Jan 13, 2018

பொங்கல் வாழ்த்துக்கள்


உயிர் வாழ வெளிச்சம் கொடுத்த

சூரியனுக்கு நன்றி சொல்லி,

 

உடனுழைத்த மாடுகளுக்கு

நன்றி சொல்லி,

 

நாயின் துணையுடன் காவல்காத்த

ஊர்சாமிக்கு ஊரே கூடி பொங்கல் வைத்து

ஊர் சனமனைத்தும்

ஒன்னுக்கொன்னாய் சாமிகும்பிட்டோம்...

நானும் அதில் இருந்திருக்கிறேன்... அன்று...

 

கடந்த வருடம் ...

சென்னையில் பக்கத்து வீட்டில் மரணம்...

போகலாமா? கூடாதா? வேண்டாமா? சரியா ?

குழப்பத்தின் பல மணிநேர குடைச்சலுக்குப் பின் போனேன்..

இருந்தவர்கள் அனைவரும் அந்நியமாய் பார்க்க

இடமகன்றேன்..

உண்மையில்

மறுநாள் முதல் பக்கத்துவீட்டு காரர்கள்

பழக்கமானார்கள்

பாவம் அவர்களுக்கும் புதுசு போல

என்னைப்போலவே தயக்கம் ....

 

எங்கும் நீர் குடிப்பதற்குத்தான் ஒரு குவளை இல்லை என்று

தோணியில் இருப்பவன் சொல்வது போல ...

எங்கும் மனிதர்கள்...

எதற்கும் உடன்படாமல்...

ஒன்றுபடுவோம் ... முடிந்தவரை

உதவிகள் செய்வோம்

 

பொங்கல் வாழ்த்துக்கள்

பூவேந்திரன்


--
Regards

        «·´`·.(*·.¸(`·.¸ ¸.·´)¸.·*).·´`·»
 «.............. Poovendran.................»
        «·´`·.(¸.·´(¸.·* *·.¸)`·.¸).·´`·»

"Be the change that you want to see in the world."- Mahatma Gandhi