மாசம் மாசம் வயித்தக் கட்டி வாயக்கட்டி மிச்சம் பிடிச்சு ஏதாவது ஆச்சுன்னா பின்னாடி உதவும்னு இன்சூரன்ஷ் கட்டின ஆட்கள், பணத்தை வாங்குறப்ப குரங்கு பங்கிட்ட அப்பம் போல பேருக்கு கொஞ்சம் வாங்குறப்ப, இதுக்கா இந்த நட நடந்தோம்னு பெரு மூச்சு விடறத பேப்பர்லயும், தெரிஞசவங்க சொல்ல கேட்டு இருக்க்கோம்...
இங்க பாருங்க ... வயிறு எரியுதுங்க...
நண்பர் புதுசா வாங்கின காரை (அவருக்கு புதுசு, கார் பழசு) ரஜினி பாட்டை கேட்டுக்கிட்டே ஸ்டைலா ஓட்டிக்கிட்டு வரும்போது இடது பக்கத்துல இருந்து வந்தவன் நேர மோதிட்டான்... நல்ல வேலை... ஆட்களுக்கு அடிபடலை... ஆனா காருக்கு நல்ல அடி.
நண்பர் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு, என்ன செய்ரதுன்னு யோசிக்கும்போதே, 'Subway'-ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த போலீஸ் உடனே வந்துட்டாங்க...போலீஸ பார்த்த நல்லதம்பி விவேக் மாதிரி எஸ்கேப் ஆகிட்டான்.
நண்பருக்கோ கை, கால் எல்லாம் நடுங்குதா இல்ல ஆடுதான்னு தெரியாத அளவுக்கு நடுக்கம். எனக்கோ எப்பவுமே போலீஸ்னா பயம், அலர்ஜி. என்ன நடக்கும்னு சொல்ல முடியாதே!
இதுதாங்க அடிபட்ட் கார்...
Police : 'Hi Dude!'
Friend : 'Sorry'
Police : No.. No... Its ok! No need to say sorry. Mistake is not yours...
- அப்ப்டின்னு சொல்லிகிட்டே போக்குவரத்த ஒழுங்குபடுத்திக்கிடே, என்னவோ எழுதினார்...மோதினவர்ட்ட Driving License, Insurance Papers வாங்கிபாத்துட்டு, அவர் கார் பாதிப்பு இல்லாததால எங்கல பார்த்து, "இந்தாங்க இதுதான் என் விசிடிங் கார்ட்...நீங்க இரண்டு நாள் கழித்து இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பேசுங்க... வேர எதாவது சொல்லனுமா?"
நாம என்ன சொல்லப்போரோம்... சரின்னு வந்த்ட்டோம்.
வெள்ளி விபத்து. திங்கள் அவருக்கு அந்த போலீஸ்காரர்ட்ட இருந்து ஒரு மின்னஞல் கேஸ் நம்ப்ர், விபத்து விளக்கத்துடன்.
செவ்வாய் இன்சூரண்ஸிடம் இருந்த்து போன்... "உங்களுக்கு, காரை இழுத்துச் சென்ற கம்பெனியில் இருந்த்து பில் வரும். கட்ட வேண்டாம்... அதை நாங்கள் கட்டிக் கொள்வோம். காரை சோதித்ததில், காரின் தற்போதய மதிப்பு 8000 டாலர்கள். உங்களுக்கு நேரம் இருக்கும்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள் தபாலில் அனுப்பிவிடுகிறோம்"
நன்பருக்கு ஒன்றும் புரியவில்லை... ஏன்னா... அவர் வாங்கினதே 4000-க்குதான். எதுக்கு வம்புன்னு, தபால்லயே அனுப்ப சொல்லிட்டார். ஆச்சர்யம் என்னன்ன... இரண்டாம் நாளே செக் வந்துருச்சு.
இதுல என்ன விசயம்னா...
- யாரும் எதுவும் கேக்கல...
- லஞசம் எதுவும் கேக்கல...
- நீ பன்னதுதான் தப்புன்ன சாட்சிய மாத்தல...
- எவ்வளவுக்கு நீ வாங்குன அப்படின்னு கேக்கல...
இப்படி சுமூகமா போகவேண்டிய வேல ஏங்க நம்ம ஊர்ல இடியாப்ப சிக்கலா இருக்கு?
கீழே பாருங்க ஒரு போலீஸ்காரர் வேலை பார்க்குரத....
பொறுமையா இருக்குரதுதான் போலீஸ் - அப்படின்னு நினச்சுடாம இதயும் பாருங்க!